எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ஒரு மாணவருக்கு இரண்டு ஆசிரியர்கள்

Friday, August 10, 2018

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே முத்துராமலிங்கபுரத்தில் ஊராட்சி ஒன்றிய
தொடக்கப்பள்ளியில், ஒரு மாணவர் மட்டும், 1ம் வகுப்பு படித்து வருகிறார்

இவருக்கு பாடம் நடத்த தலைமையாசிரியர் மற்றும் உதவி ஆசிரியர் உள்ளனர்

முத்துராமலிங்கபுரத்தில் உள்ள பெரும்பாலான மாணவர்கள், அருகே, விளாத்திகுளம், சாயல்குடி பகுதிகளில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளில் பயின்று வருகின்றனர்

விழிப்புணர்வு

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சத்துணவுக்கூடம், தீ தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் இருந்தும் மாணவர் சேர்க்கையின்றி, ஒரு மாணவருக்கு இரண்டு ஆசிரியர்கள் பாடம் நடத்துகின்றனர்.கிராம மக்கள் கூறியதாவது

கல்வித்துறையினர் மாணவர் சேர்க்கை குறித்து, விழிப்புணர்வை ஏற்படுத்தாமல் உள்ளனர். கடந்த, 2014ல், எட்டு மாணவர்கள் இருந்த இந்த பள்ளியில், தற்போது ஒரு மாணவர் மட்டுமே படிக்கிறார்

அந்த மாணவரும் ஏதாவது காரணத்தால் பள்ளிக்கு வரவில்லை என்றால், இரண்டு ஆசிரியர்களும் வேலையின்றி இருக்க வேண்டியது தான்.இவ்வாறு அவர்கள் கூறினர்

பேச்சு

கடலாடி வட்டார கல்வி அலுவலர் வசந்த பாரதி கூறியதாவது:நான் பொறுப்பேற்று, ஒரு மாதம் தான் ஆகிறது. விரைவில் பள்ளிக்கு சென்று, ஆய்வு மேற்கொண்டு, குறைகளை நிவர்த்தி செய்யவும், கூடுதல் மாணவர்களை பள்ளியில் சேர்க்கவும் கிராம மக்களிடம் பேச்சு நடத்த உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்

ஓராசிரியராகிறது ஈராசிரியர் பள்ளி



தமிழகத்தில், 3,000 அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில், ஒவ்வொன்றிலும், 20க்கும் குறைவான, மாணவர்களே படிக்கின்றனர். இப்பள்ளிகளில், இரு ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்

இவர்களுக்கு, இம்மாதம் இறுதி வரை, சேர்க்கை அதிகரிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது.இருப்பினும், பெரும்பாலான பள்ளி களில், ஒரு புதிய மாணவர் கூட, 1ம் வகுப்பில் சேர்க்கப்படவில்லை

இதனால், ஒரு ஆசிரியரை அதிக சேர்க்கை கொண்ட பள்ளிகளுக்கு, பணியிட மாறுதல் செய்து அறிக்கை சமர்ப்பிக்க, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது

செப்டம்பர் மாதத்தில், இப்பள்ளிகளை இணைக்கவும் திட்டமிடப்பட்டுஉள்ளதாக, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், இதற்கு ஆசிரியர் சங்கங்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது

Source  தினமலர் நாளிதழ்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One