எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

காலையில் பில்; மாலையில் பணம் : கருவூல கணக்கு துறை கமிஷனர் தகவல்

Wednesday, August 1, 2018

''கருவூல துறையில், காலையில் பில் தாக்கல் செய்தால், மாலையில் பணம் பட்டுவாடா செய்யும் வகையில், டிஜிட்டல் மயமாக்கும் பணி நடக்கிறது,'' என, கருவூல கணக்கு துறை கமிஷனர், ஜவஹர் தெரிவித்தார்.

மதுரையில், அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்கள் மற்றும் டில்லியில், 293 கருவூலங்கள், சார்நிலை கருவூல அலுவலகங்கள் செயல்படுகின்றன. திகார் சிறைடில்லி திகார் சிறையில் பணிபுரியும், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், 1,000 பேர், தமிழ்நாடு இல்லத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்காக, டில்லியில் கருவூலம் செயல்படுகிறது.இத்துறை மூலம், ஒன்பது லட்சம் அரசு ஊழியர்கள், ஏழு லட்சம் ஓய்வூதியர்களுக்கு சம்பளம் பட்டுவாடா செய்யப்படுகிறது.
முதியோர் உதவி தொகை உட்பட அரசு நலத் திட்டங்களும், இத்துறை மூலம் வழங்கப்படுகிறது.மேலும், 40 லட்சம் அரசு ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடும், 12 லட்சம் ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. ஓராண்டில் இத்துறை மூலம், 1.56 ஆயிரம் கோடி ரூபாய், அரசுக்கு வருவாய் ஈட்டி கொடுக்கப்பட்டது. 1.70 ஆயிரம் கோடி ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. கடந்த, 1970ல் இத்துறை கம்ப்யூட்டர்மயமானது. 2003ல், முதல் முறையாக, 'இ - சேவை' மூலம் சம்பளம் வழங்கப்படுகிறது. மாநிலம் முழுவதும், சம்பள பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள், 29 ஆயிரம் பேர் உள்ளனர்.
டிஜிட்டல் மயம் : ஒருங்கிணைந்த நிதி, மனிதவள மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ஊழியர்களின் பணிப் பதிவேடுகளை டிஜிட்டல் மயமாக்கும் பணி நடக்கிறது. இது குறித்து, 42 ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு, சம்பள அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.தற்போது, பில் தாக்கல் செய்த சில நாட்களில், பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. டிஜிட்டல் மயமாக்கம் மூலம், காலையில் பில் தாக்கல் செய்தால், மாலையில், வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One