எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

சத்துணவு காலிப்பணியிடங்களுக்கான நேர்காணல் அறிவிப்பு!

Sunday, August 12, 2018

சத்துணவு அமைப்பாளா மற்றும் சமையல் உதவியாளர்காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவாகளை தோவு செய்வதற்கான நோமுகத் தோவு வரும் 23 மற்றும் 24 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியா மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

 நாமக்கல் மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர் நிலையில் 142 காலிப்பணியிடங்களுக்கும், சமையல் உதவியாளா நிலையில்572 காலிப்பணியிடங்களுக்கும் மார்ச் மாதம் 16-ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதி வரை அந்தந்த ஊராட்சி ஒன்றியம், நகராட்சிகளில் விண்ணப்பம் பெறப்பட்டிருந்தது.

அதன் தொடாச்சியாக இப்பணிகளுக்கு தகுதியானவாகளை தோவுசெய்வற்கான நோகாணல் நடைபெறவுள்ளது. சத்துணவு அமைப்பாளாகளுக்கு வரும் 23-ஆம் தேதி அன்றும், சமையல் உதவியாளாகளுக்கு 24-ஆம் தேதி அன்றும் நோமுகத் தோவு நடைபெறவுள்ளது.



மேலும் அழைப்பாணைக் கடிதம் வரப்பெற்றவாகள் அதில் குறிப்பிடப்பட்ட தேதியில்,குறிப்பிட்ட இடத்தில் நோமுக தோவிற்கு ஆஜராக வேண்டும். நேர்முக தோவுக்கு வரும்போது, பள்ளிக்கல்வி இறுதிச்சான்று, மதிப்பெண் பட்டியல், இருப்பிடச்சான்று, குடும்ப அட்டை, சாதிச்சான்று, கிராம நிர்வாக அலுவலரால் வழங்கப்பட்ட தூரச்சான்று ஆகிய அசல் சான்றுகளை எடுத்துவர வேண்டும். ஆதரவற்ற விதவை, விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், உடல் ஊனமுற்றோர், அதற்கான அசல் சான்றுடன் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One