எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

நீண்ட இழுபறிக்கு பின் கலந்தாய்வு அறிவிப்பு

Monday, August 27, 2018




அரசு கலை கல்லுாரி பேராசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு, நீண்ட இழுபறிக்கு பின், தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 'விருப்பமுள்ளோர், 30ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டு தோறும், பேராசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு, மே-, ஜூன் மாதங்களில் நடத்தப்படுவது வழக்கம். பேராசிரியர்கள் தரப்பில் பல முறை கோரிக்கை வைத்தும், நடப்பு கல்வியாண்டிற்கான கலந்தாய்வை அறிவிப்பதில் தாமதம் நிலவியது.இதற்கிடையே, 33 பேருக்கு நிர்வாக காரணங்கள் என்ற பெயரில் இடமாறுதல் அளித்தது, அதிருப்தியை ஏற்படுத்தியது. முறைகேடான இடமாற்றங்களை தவிர்ப்பதற்காக, பேராசிரியர் சங்கங்கள் சார்பில், போராட்டங்கள் நடத்த ஆலோசித்த நிலையில், கலந்தாய்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இடமாறுதல் கலந்தாய்வு, செப்., 10, 11, 12 ஆகிய தினங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை, 30ம் தேதி முதல் செப்., 4 வரை, பேராசிரியர்கள் சமர்ப்பிக்கலாம். இதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள், www.tndcein என்ற இணைய தளத்தில் பதிவிடப்படும்.'இணையதளத்தில் பதிவுகளை மேற்கொள்ளாமல், நேரடியாக பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One