தேவகோட்டை,ஆக.26: மாணவர்களிடம் மொழிப்பற்றையும் மொழியின் மீது ஆசையையும் வளர்க்க வேண்டும்.அப்படி ஆசிரியர்களாகிய நாம் செய்தால் மாணவர்கள் தானாக சிந்திக்கவும்,தமிழ் மொழியில் வாசிக்கவும் எழுதவும் செய்வார்கள் என தமிழ்பயிற்றுநர் முனைவர் மு.கனகலட்சுமி கூறினார்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் எளிமையாக தமிழை கற்றுக்கொடுப்பது தொடர்பான பயிற்சி வகுப்பு நடைபெற்றது..
பயிற்சிக்கு வந்திருந்த அனைவரையும் ஆசிரியை முத்துமீனாள் வரவேற்றுப் பேசினார்.
பயிற்சி வகுப்பினை பள்ளித் தலைமை ஆசிரியர்
லெ.சொக்கலிங்கம் தொடங்கி வைத்துப் பேசினார் ..ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை மங்களேஷ்வரி முன்னிலை வகித்தார்.
பயிற்சி வகுப்பில் தமிழ் பயிற்றுநர் முனைவர்
மு.கனகலட்சுமி கலந்து கொண்டு ஆசிரியர்களிடம் கூறியதாவது: தமிழை தமிழாக படித்தால் தமிழ் எளிது.தமிழை யாரும் எளிமைப்படுத்த வேண்டாம்..ஏனெனில் தமிழ் மொழியே எளிமையான மொழி தான்..எழுத்து கூட்டி வாசிக்காத நிலை,சரியான உச்சரிப்புடன் தெளிவுடன் வாசித்தல்,பிழையில்லாத கையெழுத்து,உலகெங்கும் ஒரே தமிழ் இந்த பயணத்தில் ஆசிரியர்களோடு எனை இணைத்துக் கொண்டு மொழியை வளர்க்க வேண்டிய கால கட்டத்தில் மொழிக்கான வேரில் உரமிட்டுக் கொண்டிருக்கிறேன்..சொற்பொழிவு,பட்டிமன்றம்,இலக்கிய மன்றம் என பல அறிஞர்களும்,கவிஞர்களும் தமிழ் ஆர்வலர்களும் தமிழை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்..ஆனால் அடிப்படை தமிழ் எழுத்துகளை உச்சரிக்கவும்,எழுதவும் முறையான ஆய்வு பல ஆண்டுகளாக நம் தமிழகத்தில் இல்லை..எனவே தற்போது தமிழ் வாசிப்பு திறனில் ஏற்படும் சிக்கல்களும் தீர்வுகளும் என்னும் தலைப்பில் 18 ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டு இறுதி 4 ஆண்டு காலம் கள ஆய்வு செய்து உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் பட்டய படிப்பு முடித்துள்ளேன்.அதன் பிறகு தான் இந்த ஆய்வு திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் செயல்படுத்தி வெற்றி பெறப்பட்டு இன்று பல மாவட்டங்களில் பல ஆசிரியர்கள் உச்சரிப்பை தெளிவாக கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்..தமிழ் வாசிப்புத் திறனில் கள ஆய்வுப் பணியில் முன்னோடியாக நான் இருப்பதால் எழுத்துக்கள் பற்றி ஆய்வை மேற்கொள்ளும் ஆய்வாளர்களாக ஆசிரியர்கள் பலர் வர வேண்டும் என்பதே தனது நோக்கம்..மொழியை காக்கும் சூழலில் ஆசிரியர்களாகிய நாம் இருக்கிறோம்.எனவே நாம் முதலில் நம் தமிழ் மொழியை காக்க வேண்டும்.பின்னர் மாணவர்களிடம் மொழிப்பற்றையும் மொழியின் மீது ஆசையையும் வளர்க்க வேண்டும்.அப்படி ஆசிரியர்களாகிய நாம் செய்தால் மாணவர்கள் தானாக சிந்திக்கவும, தாய் மொழியில் வாசிக்கவும் எழுதவும் செய்வார்கள்..மாணவர்களை மதிப்பீடு செய்யும் பொழுது படத்தின் வாயிலாக மதிப்பீடு செய்ய வேண்டும்..மாணவர்களுக்கு விளையாட்டு முறையில் கற்றுக் கொடுக்க வேண்டும்...நம் எண்ணங்கள் எந்த அளவுக்கு நல்லதாக உள்ளதோ,நம் எண்ணங்களில் எந்தளவுக்கு தன்னம்பிக்கை உள்ளதோ அந்தளவுக்கு தான் நம் வாழ்வும் உயரும். எனவே மாணவர்களாகிய நீங்கள் நல்லவர்களாகவும் நேர் சிந்தனை உடையவர்களாகவும் இருக்க வேண்டும் என்றார்...
பயிற்சிக்கு வந்திருந்த ஆசிரியர்கள் கூறியதாவது:ஒரு ஆசிரியராக இருந்து இன்னொரு ஆசிரியர் கற்பிக்கும் முறை பற்றி வகுப்பு எடுப்பதை பார்க்க மகிழ்வாக இருந்தது..இந்த பயிற்சிக்கு வந்த பிறகு தமிழை எவ்வாறு வாசிக்க எழுத கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற விளக்கம் கிடைத்துள்ளது..இந்த பயிற்சியில் நாங்கள் கற்றுக் கொண்டதோடு நின்றுவிடாமல் எங்களது மாணவர்களுக்கும் பயிற்சியில் கற்றுக் கொண்டதை கற்றுக் கொடுப்போம்.இந்த பயிற்சியானது சரியான காலத்தில் எங்களுக்கு கிடைத்ததாகவே உணர்கிறோம் என்றனர்..
இப்பயிற்சியில் திருச்சியைச் சேர்ந்த நல்லாசிரியை லதாபாலாஜி மற்றும் இராமநாதரபுரம் ,சிவகங்கை ,புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்..முடிவில் ஆசிரியர் கருப்பையா நன்றி கூறினார்..
நம் அன்னைத் தமிழை காத்திட செய்யும் சீரிய முயற்சி...!
ReplyDeleteசிறப்பு..தோழி செம்மொழியாம் நம் தமிழ் மொழியிலே பிழையின்றி எழுதும் பேசும் வழி அறிய தங்களைப் போன்றோரின் தமிழ் ப்பணி கண்டு மிக்க மகிழ்ச்சியடைகின்றோம்..👏👏
ReplyDelete