எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

வருமான வரி கணக்கு தாக்கல்... செஞ்சிட்டீங்களா?

Thursday, August 30, 2018


வருவாய் ஈட்டும் அனைவரும், அபராத மின்றி வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய, நாளையே கடைசி நாள். நாளைக்கு வருமான வரி கணக்கை முடிக்கவில்லை என்றால், அபராதம் செலுத்த வேண்டி வரும் என, வருமான வரித்துறை கண்டித்துள்ளது.

கடந்த, 2017 - 18க்கான வருமான வரி கணக்கு தாக்கல், ஏப்ரலில் துவங்கி, நடந்து வருகிறது.





நடப்பு ஆண்டு முதல், மாத ஊதியம், மாத ஓய்வூதியம் என, ஆண்டுக்கு, 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல், வருமான வரி உச்சவரம்பை தாண்டும் அனைவரும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது, கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

உச்சவரம்பு

வருமான வரியை குறைப்பதற்காக, வரி ஆதாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு, உச்சவரம்புக்கு கீழ் வருமானம் இருந்தாலும், இந்த ஆண்டு, வருமான வரி கணக்கை, கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும். இதற்கான அவகாசம், நாளையுடன் முடிகிறது. நாளைக்குள் தாக்கல் செய்யாவிட்டால், அபராதம் கட்ட வேண்டி வரும் என, வருமான வரித்துறை கண்டித்து உள்ளது.

அதிகாரிகள் கூறியதாவது:

ஏற்கனவே, 2017 - 18க்கான, வருமான வரி கணக்கு தாக்கலுக்கான காலம், ஜூலையுடன் முடிந்த நிலையில், ஆக., 31 வரை அவகாசம் நீட்டிக்க பட்டது. இதன்படி, அவகாசம் நாளை முடிகிறது. வரு மான வரி உச்ச வரம்பை எட்டும் அனைவரும், நாளைக்குள் கட்டாயம் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.


நாளை நள்ளிரவு, 12:00 மணியை தாண்டி தாக்கல் செய்யப்படும், அனைத்து கணக்குகளுக்கும் அபராதம் விதிக்கப்படும். 5 லட்சம் ரூபாய்க்கு கீழ் வருமானம் இருப்போர்,ரூ. 1,000 தாமத கட்டணமும்; ஐந்து லட்சத்துக்கு மேல் வருமானம் இருப்பவர்கள், ரூ.5,000 தாமத கட்டணத் துடன், டிச., 31க்குள் கணக்கு தாக்கல் செய்ய லாம்.


வரும், 2019 ஜனவரி முதல், மார்ச், 31க்குள், 10 ஆயிரம் ரூபாய் தாமத கட்டணம் செலுத்தி, வரு மான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியும்.அதன் பின், 2017 - 18க்கான வருமான வரிகணக்கு தாக்கல் செய்ய முடியாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


இந்நிலையில், வருமான
வரி கணக்கு தாக்கல் செய்வோருக்கு, வரித்துறை அலுவலகத்தில், 'வருமான வரி கணக்கு தயாரிப்பு உதவி மையம்' அமைக்கப்பட்டு உள்ளது. கணக்கு தாக்கல் செய்வோர், இந்த உதவி மையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என, வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கேரளாவுக்கு அவகாசம்

இடைவிடாது கொட்டித் தீர்த்த கன மழையால், கேரளா வெள்ளத்தில் மூழ்கியது. மழை விட்ட நிலையில், கொஞ்சம் கொஞ்சமாக, வெள்ள பாதிப்பில் இருந்து, மீண்டு வருகிறது.


இதனால், மத்திய நேரடி வரி வாரியம், ஜூலை, 26 அறிவிப்பில், சிறிய மாற்றத் தைச் செய்துள்ளது. இதன் படி, கேரளாவைச் சேர்ந்தவர்கள், வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற் கான அவகாசம், செப்., 15 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One