டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத கூடுதல் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.இந்த உயர்வானது ஜூலை 1ம் தேதி முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும். இந்த உயர்வைத் தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியானது 7 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாக உயர்ந்துள்ளது.#2%12018# ../—(@_)29, 2018
இந்த உயர்வின் மூலம் 48.1 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 62 லட்சம் ஓய்வூதியர்களும் பலன் பெறுவர்.
இந்த உயர்வின் காரணமாக மத்திய அரசுக்கு ஆண்டுதோறும் ரூ. 6112 கோடி கூடுதல் செலவு ஏற்படும். நடப்பு நிதியாண்டில் ரூ. 4074 கோடி செலவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment