தமிழக அரசின் அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் இயங்கி வருகிறது.
இங்கு ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் பணிகளுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலை, மெயின் தேர்வுகளுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. முதல்நிலைத் தேர்வுக்கான இலவச பயிற்சிக்கு நுழைவுத்தேர்வு மூலமாக தகுதி யுள்ள மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் முதன்மை தேர்வுக்குப் பயிற்சி இலவசம். அந்த வகையில், 2019-ம் ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு இலவச பயிற்சிக்கு தமிழகத்தைச் சேர்ந்த தகுதியுள்ள மாணவ-மாணவிகளை தேர்வு செய்வதற் கான நுழைவுத் தேர்வு வரும் ஜனவரி மாதம் 18-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழகத் தில் உள்ள முக்கிய நகரங் களில் நடத்தப்பட உள்ளது. இந் நுழைவுத்தேர்வு எழுத விரும்பு வோர் இன்று (திங்கள்கிழமை) முதல் செப்டம்பர் 19-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப் பிக்கலாம். கூடுதல் விவரங்களை www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என பயிற்சி மையத்தின் முதல்வர் அறிவித் துள்ளார். இப்பயிற்சி மையத்தில் ஏற் கெனவே முதல்நிலைத் தேர்வுக்கு முழுநேர பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்
No comments:
Post a Comment