எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

NEET Exam - இந்த ஆண்டு கருணை மதிப்பெண் கிடையாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு

Thursday, August 30, 2018




நீட் தேர்வில் இந்த ஆண்டு கருணை மதிப்பெண் கிடையாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழில் தவறாக மொழிபெயர்க்கப்பட்ட கேள்விக்கு கருணை மதிப்பெண் வழங்க முடியாது என்று தெரிவித்துள்ளது. தமிழக மாணவர்களுக்கு கூடுதலாக 196 மதிப்பெண் தரமுடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளது.

மருத்துவ படிப்புக்கு ஆங்கிலம் முக்கியம் என்றால் பிறமொழிகளில் ஏன் தேர்வு நடத்தப்படுகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளது. நீட் தேர்வு வழக்கு விசாரணையின் போது சிபி எஸ் க்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் வழக்கு விசாரணையை செப்டம்பர் 26-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

ஆங்கிலம் கட்டாயம்

நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வு எழுதுவதற்கு ஆங்கிலம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. மருத்துவ படிப்பு முழுவதுமே ஆங்கிலத்தில்தான் கற்பிக்கப்படுகிறது என்று சிபிஎஸ்இ விளக்கமளித்துள்ளது. மேலும் பள்ளிகளில் ஆங்கிலம் மொழிப்பாடமாக கற்பிக்கப்படுகிறது என்று சிபிஎஸ்இ கூறியுள்ளது. நீட் வழக்கு விசாரணையின் போது உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ வாதிட்டது.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One