எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 03.09.18

Monday, September 3, 2018

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 03.09.18

திருக்குறள்


அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்.

விளக்கம்:

நம்மை வந்தடையும் செல்வம் நிலையற்றது என்பதை உணர்ந்து அதைக் கொண்டு அப்பொழுதே நிலையான நற்செயல்களில் ஈடுபட வேண்டும்.

பழமொழி

A hasty man never wants voe

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு

இரண்டொழுக்க பண்பாடு

1. பாட்டிலில் அடைத்த மற்றும்  பாலித்தீன் பைகளில் உள்ள பொருட்களை முற்றிலும் தவிர்த்திடுவேன்.

2.இயற்கையில் கிடைக்கக் கூடிய ஆரோக்கியம் நிறைந்த உணவுகளைத் தேர்வு செய்து உண்பேன்.

 பொன்மொழி

மனிதன் தோல்வியின் மூலமே
புத்திசாலி ஆகின்றான்.

          - விவேகானந்தர்

பொது அறிவு

1.தேசிய இளைஞர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

 ஜனவரி 12

2. உலக நுகர்வோர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

 மார்ச் 15

English words and. Meanings

Victory.  வெற்றி
Vitamin.  ஊட்டச்சத்து
Verify.     சரிபார்த்தல்
Virtues.   நல்லொழுக்கங்கள்
Vocabulary சொற்களஞ்சியம்





நீதிக்கதை

அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!!

மன்னரின் அரசவைக்கு...
ஒருவர் தான் ஆரம்பிக்க இருக்கும் கல்லூரிக்கு நிதி கேட்டு வருகிறார்.

" நிதி தானே ..இந்தா என தன் காலில் இருந்த ஷூவை வந்தவர் மேல் வீசி எறிந்தார்.

எதிர்பாராத நிகழ்வால் நிலைகுலைந்தாலும்..ஒருபக்கம்
அவமானம்..மனதை கஷ்டப்படுத்தியது.

இருந்தாலும் ஒரு நல்ல விஷயத்துக்காகத் தானே அவமானப்படுகிறோம்..என
தேற்றிக்கொன்டு..மன்னருக்கு நன்றி சொல்லி கிளம்பினார்.

மன்னருக்கு ஒன்றும் புரியவில்லை .

என்னடா நாம் அவமானப்படுத்த ஷூவை வீசினோம்   நன்றி சொல்லி செல்கிறானே....என.

ஒருவரை எப்படி அவமானப்படுத்த முயன்றாலும்..எதிரிலிருப்பவர் தன் நோக்கத்தில் உறுதியாய் இருந்தால் என்ன செய்ய முடியும்

 மேலும் தன்மேல் நம்பிககையில்லாதவர்கள் தான்அவமானமாய் உணர்ந்து எமோஷன் ஆவார்கள்.

வெளியில் ஒரே சத்தம் ..அமைச்சரை அழைத்த மன்னர் என்ன அங்கே..என்றார்

நீங்க எறிந்த ஷூவை ஏலம் போடுகிறான் மன்னா..கல்லூரி கட்ட மன்னர் தந்த ஷூ..என்றே கூவுகிறான்! என்றார்

எவ்வளவு போகிறது...

படு கேவலமாய் பத்து நாணயத்துக்கு மேல் ஏலம் போகவில்லை என்றார்..

அய்யய்யோ..என்ன விலையானாலும் ஏலம் எடு...

அமைச்சரும் ஐம்பது லட்சம் கொடுத்து எடுத்தார்..

நிதி கேட்டு வந்தவர் மீண்டும் மன்னரிடம் வந்தார்.

மன்னா நீங்கள் போட்ட ஷூ பாதிகட்டிடம் கட்ட கிடைத்து விட்டது

அடுத்த ஷூவை எப்போது போடுவீர்கள் என்றார் பாருங்கள்

மன்னர் வந்தவரின் சாமார்த்தியத்தையும்.. சகிப்புத்தன்மையையும் எண்ணி...தாமே கல்லூரியை கட்டித்தந்தார்.

அது தான் தற்போதைய காசி பனாரஸ் பல்கலைக்கழகம்.

அவமானத்தை யார் ஒருவர் அவமானமென உணர்கிறார்களோ
அவர்கள் ஒருநாளும் எதையும்
ஜெயிக்க முடியாது.

எப்போதும் நோக்கம் நிறைவேறுவது தான் முக்கியம்.

மான அவமானங்களல்ல...

நாம் செய்வது நல்லதாய் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு அவமானமும் வெற்றிக்கான படிக்கட்டுக்கள்
என எண்ணுவோம்.

எந்தவொரு வளர்ச்சியையும் நீண்ட நாட்கள் யாராலும் தடுத்து நிறுத்த முடியாது...

அந்த காலணி வீசப்பட்டது திரு. மதன் மோகன் மாளவியா அவர்கள் மீது... "அவர் தான் பனாரஸ் பல்கலைக் கழகத்தை நிறுவியவர்"

அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!!

இன்றைய செய்திகள்

03.09.18

*  10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

* பாகிஸ்தான் உயர் நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக பெண் தலைமை நீதிபதியாக தஹிரா சப்தார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* தமிழக அரசுப் பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு போஸ்டர் வடிவமைப்புப் போட்டி செப்.3-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

* ஆசிய விளையாட்டுப் போட்டியின் குத்துச்சண்டை விளையாட்டில், ஆடவருக்கான 49 கிலோ பிரிவில் இந்தியாவின் அமித் பங்கால் சனிக்கிழமை தங்கப் பதக்கம் வென்றார்.

* ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இந்தியா 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலப் பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் 8 - வது இடத்தைப் பிடித்தது.

Today's Headlines

🌸Ariyalur:In memory of and as a tribute to S. Anitha, who challenged the National Eligibility-cum-Entrance Test (NEET) in the Supreme Court, her family members have built a library at Kuzhumur near Senthurai, her native village, in Ariyalur district.💐

🌸Coimbatore:The School Education Minister K.A. Sengottaiyan said that the department would establish the Atal Tinkering Labs in schools to kindle scientific spirit among students and improve their understanding of concepts.💐

🌸Coimbatore;Hundreds of kite flyers enjoyed the traditional sports for the third year in a row at the 3rd International Kite festival organised by a real estate firm on Saturday.🌹

🌸Trichy:The Tiruchi Corporation has decided to reward city residents, who successfully compost their organic waste in their households, with gold coins.

🌸Asian games:Pranab Bardhan and Shibhnath Sarkar on Saturday won the men’s pairs gold in the debut sport of bridge in the Asian Games. India has also won a bronze each in the men’s team and mixed team events.🎖🏆💐

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One