எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

1,127 சிறப்பாசிரியர்களுக்கு மதிப்பூதியம் உயர்வு

Monday, September 17, 2018





சிறப்பாசிரியர்கள் மற்றும் தசை பயிற்சியாளர்களின் மதிப்பூதியத்தை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.14 ஆயிரமாக உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 இதுதொடர்பாக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
 தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின்கீழ் உள்ள மனவளர்ச்சி குன்றியோர், பார்வைத் திறன் மற்றும் செவித்திறன் குறையுடையோருக்காக செயல்படும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணிபுரியும் சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் தசை பயிற்சியாளர்களின் மதிப்பூதியத்தை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.14 ஆயிரமாக உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
 இவ்வாறு மதிப்பூதியம் உயர்த்தி வழங்கப்படுவதால், 1,127 சிறப்பாசிரியர்கள் மற்றும் தசை பயிற்சியாளர்கள் பயன்பெறுவர். இதனால், அரசுக்கு ஆண்டுக்கு ரூ.5 கோடியே 42 லட்சம் செலவாகும் என அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One