எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

வரலாற்றில் இன்று 14.09.2018

Friday, September 14, 2018





செப்டம்பர் 14 (September 14) கிரிகோரியன் ஆண்டின் 257 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 258 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 108 நாட்கள் உள்ளன.


 நிகழ்வுகள்

81 – டைட்டசு என்ற தனது சகோதரன் இறந்ததை அடுத்து டொமீசியன் உரோமைப் பேரரசனாக முடி சூடினான்.
1752 – கிரிகோரியன் நாட்காட்டியை பிரித்தானியா ஏற்றுக்கொண்டது. இதன்படி புதிய நாட்காட்டியில் 11 நாட்களை அது இழந்தது. முன்னைய நாள் செப்டம்பர் 2 ஆகும்.
1812 – நெப்போலியப் போர்கள்: நெப்போலியனின் படைகள் மொஸ்கோவினுள் நுழைந்தனர். ரஷ்யப் படைகள் நகரை விட்டு விலகியதும் மாஸ்கோவில் தீ பரவ ஆரம்பித்தது.
1829 – உதுமானியப் பேரரசு உருசியாவுடன் அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டது. உருசிய-துருக்கியப் போர் முடிவுக்கு வந்தது.
1846 – யாங் பகதூர் ராணாவும் அவரது சகோதரர்களும் நேப்பாளத்தின் பிரதமர் உட்பட 40 அரச குடும்பத்தினரைப் படுகொலை செய்தனர்.
1847 – மெக்சிக்கோ நகரத்தை “வின்ஃபீல்ட் ஸ்கொட்” தலைமையிலான அமெரிக்கப் படைகள் கைப்பற்றினர்.
1886 – தட்டச்சுப் பொறியின் நாடா கண்டுபிடிக்கப்பட்டது.
1901 – அமெரிக்க அதிபர் வில்லியம் மக்கின்லி செப் 6இல் இடம்பெற்ற கொலைமுயற்சியின் பின்னர் இறந்தார்.

1917 – உருசியா அதிகாரபூர்வமாகக் குடியரசானது.
1944 – இரண்டாம் உலகப் போர்: மாஸ்ட்ரிக்ட் நேச நாடுகளால் விடுவிக்கப்பட்ட முதலாவது டச்சு நகரம் ஆனது.
1954 – சோவியத் ஒன்றியம் அணுவாயுதச் சோதனையை மேற்கொண்டது.
1959 – சோவியத்தின் லூனா 2 விண்கலம் சந்திரனில் மோதியது. சந்திரனில் இறங்கிய மனிதனால் அமைக்கப்பட்ட முதலாவது விண்கலம் இதுவே.
1960 – எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு (ஓப்பெக்) உருவாக்கப்பட்டது.
1962 – கொங்கோ மக்களாட்சிக் குடியரசில் இராணுவத் தளபதி ஜோசப் மோபுட்டு இராணுவப் புரட்சியை மேற்கொண்டு பிரதமர் பத்திரிசு லுமும்பாவை அரசு பதவியில் இருந்து கலைத்தார்.
1979 – ஹஃபிசுல்லா அமீனின் கட்டளைப் படி ஆப்கானிஸ்தான் அரசுத்தலைவர் நூர் முகம்மது தராக்கி படுகொலை செய்யப்பட்டார். ஹஃபிசுல்லா அமீன் புதிய அரசுத் தலைவர் ஆனார்.
1982 – லெபனானின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பசீர் ஜெமாயெல் படுகொலை செய்யப்பட்டார்.
1984 – ஜோ கிட்டிங்கர் வளிமக் கூண்டில் அத்திலாந்திக் பெருங்கடலைத் தாண்டிய முதல் மனிதர் என்ற பெருமையைப் பெற்றார்.
1999 – கிரிபட்டி, நௌரு, டொங்கா ஆகியன ஐநா அவையில் இணைந்தன.
2000 – எம்எஸ் டொஸ் கடைசித் திருத்தம் வெளியிடப்பட்டது.
2000 – விண்டோஸ் மில்லேனியம் வெளியிடப்பட்டது.
2003 – சுவீடனில் இடம்பெற்ற மக்கள் வாக்கெடுப்பில் யூரோ நாணயத்தை ஏற்றுக் கொள்ளும் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.
2003 – ஐரோப்பிய ஒன்றியத்தில் எசுத்தோனியா இணைவதற்கு அந்நாட்டில் இடம்பெற்ற பொது வாக்கெடுப்பில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.


2005 – நடிகர் விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்ற புதிய அரசியற் கட்சியை ஆரம்பித்தார்.
2008 – உருசியாவின் ஏரோபுளொட் விமானம் பேர்ம் கரை விமான நிலையத்தில் விபத்துக்குள்ளாகியதில் அனைத்துப் 88 பயணிகளும் கொல்லப்பட்டனர்.



பிறப்புக்கள்

  1853 – சேர் பொன் அருணாசலம், இலங்கையின் தேசியத் தலைவர். (இ. 1924)
    1939 – சோ. பத்மநாதன், ஈழத்து எழுத்தாளர்
1965 – திமித்ரி மெட்வெடெவ், ரஷ்யாவின் மூன்றாவது அதிபர்
1973 – நாஸ், அமெரிக்க ராப் இசைக் கலைஞர்

இறப்புகள்

407 – யோவான் கிறிசோஸ்தோம், பைசாந்தியப் பேராயர் (பி. 347)
1852 – ஆர்தர் வெல்லஸ்லி, முதலாம் வெல்லிங்டன் பிரபு, ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (பி. 1769)
1965 – ஜே. டப்ளியு. ஹர்ண், ஆங்கிலேயத் துடுப்பாட்ட வீரர் (பி. 1891)
2015 – கௌதம நீலாம்பரன், தமிழக எழுத்தாளர் (பி. 1948)
2015 – இந்திக குணவர்தனா, இலங்கை இடதுசாரி அரசியல்வாதி (பி. 1943)

சிறப்பு நாள்

அனைத்து நாடுகள் கலாசார ஒற்றுமை நாள்


No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One