தமிழகத்தில் அரசு, அரசு நிதியுதவி, பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் 15.66 லட்சம் பேருக்கு வெப்கேமரா, வைபை வசதியுடன் கூடிய நவீன லேப்டாப்களை விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் அரசு, அரசு நிதியுதவி பள்ளிகளில் பிளஸ்2 முடிக்கும் நிலையில் உள்ளவர்கள், பிளஸ்1 படிப்பவர்கள் 10.66 லட்சம் மாணவர்கள், அரசு, அரசு நிதியுதவி பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாமாண்டு படிக்கும் மாணவர்கள் 13,679 பேர், கடந்த ஆண்டு பிளஸ்2 முடித்த 4.72 லட்சம் மாணவர்கள், 12,663 ஐடிஐ மாணவர்கள் என மொத்தம் 15.66 லட்சம் பேர் அரசின் இலவச லேப்டாப் பெறும் பயனாளிகளாக பட்டியலிடப்பட்டுள்ளனர். .
இவர்களுக்கு வெப்கேமரா, வைபை, புளூடூத், தமிழ்மொழி டைப் செய்வதற்கான யூனிகோட் கீபோர்ட், 500 ஜிபி சேகரிப்பு திறன் கொண்ட ஹார்ட் டிஸ்க், டிடிஆர்-4 வகை ரேம் போன்ற நவீன வசதிகள் அடங்கிய லேப்டாப்கள், இந்திய தர நிர்ணய ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களிடம் இருந்து தமிழக அரசின் எல்காட் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த லேப்டாப்கள் அடுத்த ஜனவரி மாதத்துக்குள் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
மேற்கண்ட நவீன வசதிகளுடன் வழங்கப்படும் லேப்டாப்களில் மாணவர்களின் உயர்கல்விக்கான குறிப்பிடத்தக்க அம்சங்கள், அரசு பள்ளிக்கல்வித்துறையிலும், உயர்கல்வித்துறையிலும் மேற்கொண்டு வரும் திட்டங்கள், மாணவர்களுக்கான நலத்திட்டங்கள் என முக்கிய தகவல்களும் பதிவேற்றப்படுகிறது. அதேபோல் விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்துடன், லினக்ஸ் என்ற 2வது ஆபரேட்டிங் சிஸ்டமும் அதனுடன் இன்சால்ட் செய்யப்படுகிறது. இதன் மூலம் பொறியியல், மருத்துவம் போன்ற உயர்கல்வி படிப்பவர்களும் இதனை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்
No comments:
Post a Comment