தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் மூலம் நடத்தப்படும் பிவிஎஸ்சி மற்றும் ஏஎச் படிப்புக்கான கலையியல் பிரிவில் காலியாக உள்ள இடங்களில் மாணவ, மாணவியர் சேர்ப்பதற்கான இரண்டாம் கட்ட கவுன்சலிங் 22ம் தேதி நடக்கிறது. அதேபோல, இளநிலை தொழில்நுட்ப பிரிவான பிடெக் பட்டப் படிப்புக்கான சிறப்பு மற்றும் கலைப் பிரிவில் காலியாக உள்ள இடங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கான இரண்டாம்கட்ட கவுன்சலிங் 23ம் தேதி நடக்கிறது.
கவுன்சலிங்குகள் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் உள்ள அண்ணா கலை அரங்கில் நடக்கிறது. கவுன்சலிங்கில் பங்கேற்க தகுதியுள்ள மாணவர்கள் குறித்த பட்டியல், மதிப்பெண்கள் விவரங்கள் www.tanuvas.ac.in, www2.tanuvas.ac.in ஆகிய இணைய தளங்–்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பிவிஎஸ்சி மற்றும் ஏஎச், பிடெக் முதலாம் ஆண்டு பட்டப்படிப்புகளுக்கான வகுப்புகள் அக்டோபர் 3ம் தேதி தொடங்க உள்ளன.
No comments:
Post a Comment