எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

'எமிஸ்' பதிவு பணிகள் 3 நாட்கள் நிறுத்தி வைப்பு ஆசிரியர்கள் நிம்மதி

Saturday, September 1, 2018




மதுரை, பள்ளி மாணவர்களின் முழு விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் 'எமிஸ்' (கல்வி மேலாண்மை மற்றும் தகவல் அமைப்பு) பணிகள் சர்வர் பிரச்னையால் 3 நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.கல்வித்துறையில் மாணவர்களின் படிப்பு, பெற்றோர் விவரங்கள், ஆதார் எண் போன்றவற்றை 'எமிஸ் தமிழ்நாடு ஸ்கூல்' என்ற இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யும் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு யூசர் நேம், பாஸ்வேர்டு ஒதுக்கப்பட்டு அதன் மூலம் மாணவர்களின் விவரங்களை ஆக., 31க்குள் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டது.அனைத்து மாவட்டங்களிலும் ஒட்டுமொத்தமாக இப்பணி ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டதால் பகல் முழுவதும் 'எமிஸ்' இணையதள சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. ஒரு மாணவன் விபரத்தை பதிவேற்ற அரை மணி நேரம் ஆனது. இரவிலும், அதிகாலையிலும் மட்டுமே இணையதளம் தடங்கலின்றி இயங்கியதால் ஆசிரியர்கள் இரவு முழுவதும் விழித்திருந்து பதிவேற்றம் செய்யும் நிலை ஏற்பட்டது.இதனால், 'திருடர்களே ஆசிரியர்கள் வீட்டு பக்கம் இரவு போகாதீங்க... எமிஸ் பணிக்காக இரவு முழுவதும் விழித்திருக்கின்றனர். மாட்டிக்கொள்வீர்,' என சமூக வலைத்தளங்களில் கிண்டல் மீம்ஸ்கள் கூட வெளியாகின.இணையதளத்தில் பதிவேற்றுவதில் பெரும் பிரச்னை எழுந்ததால் 'எமிஸ் பதிவேற்றத்தை ஆக.,31 முதல் செப்., 2 வரை மேற்கொள்ள வேண்டாம் எனவும், மறு அறிவிப்பு வந்த பின் பணியை தொடரலாம்,' எனவும் கல்வித்துறை தெரிவித்துள்ளது.இதுகுறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், ''மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் பதிவேற்ற பணி நடந்ததால் மாஸ்டர் சர்வர் பிரச்னை ஏற்பட்டது. இதுதொடர்பான பராமரிப்பு பணிக்காக பதிவேற்றம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது,''என்றார்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One