எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

சான்றிதழ்களில் ஆதார் பதிய தடை : கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவு

Thursday, September 6, 2018

மாணவர்களின் கல்விசான்றிதழ்களில், ஆதார் எண்ணை பதிவு செய்ய, மத்தியஅரசு, திடீர் தடை விதித்துள்ளது.

நாடு முழுவதும், அரசு துறைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளிடம் நிர்வாக செயல்பாடுகளுக்காக, ஆதார் எண் சேகரிக்கப் பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவ- மாணவி யரிடமும் ஆதார் எண் சேகரிக்கப்பட்டு, கல்வி நிறுவன தகவல் தொகுப் பில் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆதார் எண்ணை பயன்படுத்தி, சான்றிதழ்களை சரி பார்க்கவும், சான்றிதழ்களை வழங் கவும், ஏற்கனவே கல்வி நிறுவனங்கள் அறிவுறுத்தப் பட்டு இருந்தன. இந்நிலையில், ஆதார் எண்ணை, சான்றிதழ்களில் பதிவு செய்ய, மத்திய அரசு திடீர் தடை விதித்துள்ளது.






இதுகுறித்து, பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி.,யின் செயலர், ரஜினிஷ் ஜெயின், அனைத்து பல் கலைகளுக்கும், அனுப்பி உள்ள சுற்றறிக்கை: மத்திய அரசின், மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் சார்பில், 2017 மார்ச்சில், கல்வி நிறுவனங் களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

இதில், மாணவ - மாணவி யரின் ஆதார் எண்ணை பயன்படுத்துவது தொடர்பான, வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டிருந்தன.இந்நிலையில், ஆதார் எண்ணை வெளிப்படையாக தெரிவித்தால், அதன் வழியே, தனிநபர் ரகசியங்கள் வெளியாக வாய்ப்புகள் உள்ளன.

எனவே, பல்கலைகளும், கல்லுாரிகளும், தங்கள் மாணவர்களின் சான்றிதழ்களில், ஆதார் எண்ணை, எந்த காரணம் கொண்டும் பதிவிட வேண்டாம்.

மேலும், ஆதார் எண்ணை, வேறு பயன்பாடுகளுக்கு பகிர்ந்து கொள்ளவும் வேண்டாம்.இந்த உத்தரவை பல்கலைகளும், கல்லுாரிகளும் உடனடியாக பின்பற்றி, தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

1 comment

  1. வாழ்க வளமுடன். EMISஇல் ஆதார் எண் (ஆதாரில் உள்ளபடி பெயர் போன்ற திருத்தங்கள் பதிவிட வேண்டியதில்லையா? பதிலை சொல்லுங்க நிம்மதியா இருக்கலாம்.

    ReplyDelete

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One