தேசிய வருவாய் வழி திறனறி தேர்வுக்கு, வரும், 17 முதல் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசு தேர்வு துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தேசிய வருவாய் வழி மற்றும் கல்வி திறன் உதவி திட்டத்தின் கீழ், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது. இதற்குத் தகுதியான மாணவர்களை தேர்வு செய்யும் வகையில், வட்டார அளவில், தேர்வு மையங்கள் அமைத்து, திறனறி தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுக்கான விண்ணப்ப படிவங்களை, வரும், 17 முதல், 30 வரை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, மாணவர்கள், தாங்கள் படிக்கும் பள்ளி தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு, அக்., 1 வரை அவகாசம் வழங்கப்படுகிறது. தேர்வு குறித்து கூடுதல் விபரங்களை, www.dge.tn.gov.in என்ற, இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
வருவாய் வழி திறன் தேர்வு அறிவிப்பு
Thursday, September 13, 2018

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment