எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கி பயிலும் நாகை மாணவிக்கு காமராஜர் விருது

Tuesday, September 11, 2018


நாகையில் 11ம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவி பிரீத்தாவிற்கு காமராஜர் விருது கிடைத்துள்ளது. நாகையில் ஒரு தொண்டு நிறுவனம் எஸ்.ஓ.எஸ். குழந்தைகள் கிராமம் தொடங்கியுள்ளது. இதில் தாய் மற்றும் தந்தையை இழந்த குழந்தைகள் தத்து எடுத்து குடும்ப சூழ் நிலையை போல் வளர்க்கப்பட்டு வருகின்றனர். இந்த குழந்தைகள் கிராமத்தில் 6 ஆண்டுகளுக்கு முன் தாய், தந்தையை இழந்த பிரீத்தா என்ற மாணவியை அரசு மூலம் தத்து எடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறார். இவர் நாகை நடராஜன் தமயந்தி மேல்நிலைப் பள்ளியில் தற்போது 11ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பிரீத்தா நன்றாக படிப்பதோடு நடனம், கேரம் விளையாட்டில் ஆர்வம் மிக்கவர். இவருக்கு நடனம், கேரம் விளையாட்டுகளில் பங்குபெற்று அதிக பரிசுகளை பெற்றுள்ளார்.

இதையடுத்து தமிழக அரசு பிரீத்தாவிற்கு படிப்பு மற்றும் நடனம், கேரம் போன்றவற்றில் பங்கு பெற்று பரிசுகள் பெற்றதை அடிப்படையாகக்கொண்டு காமராஜர் விருது வழங்கியது. விருது சான்றிதழுடன் ரூ.10 ஆயிரம் ரொக்க பரிசை கடந்த 5ம்தேதி சென்னையில் தமிழக முதல்வர் பழனிச்சாமி வழங்கினார். காமராஜர் விருது பெற்ற மாணவி பிரீத்தாவை நடராஜன் தமயந்தி மேல் நிலைப் பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், சக மாணவ, மாணவிகள், மற்றும் எஸ்.ஓ.எஸ். தொண்டு நிறுவன நிர்வாகிகள், அங்கு தங்கியுள்ள சக மாணவிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One