எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

TNPSC - குரூப்-2 தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ள 1,199 பணி இடங்களுக்கு 6½ லட்சம் பேர் போட்டி!

Tuesday, September 11, 2018

குரூப்-2 தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ள 1,199 காலிப்பணியிடங்களுக்கு 6 லட்சத்து 41 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
ஒரு பணியிடத்திற்கு 535 பேர் போட்டி போடுகிறார்கள்.அரசுத்துறைகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு நடத்தி பணியிடங்களை நிரப்பி வருகிறது.

அதன்படி அரசு துறைகளில் காலியாக உள்ள சப்-ரிஜிஸ்டர் கிரேடு-2 காலிப்பணியிடங்கள் 73, தமிழ்நாடு கூட்டுறவுகழகங்களில் சீனியர் ஆய்வாளர்கள் காலிப்பணியிடங்கள் 599, தமிழ்நாடு வேளாண்மை மார்க்கெட்டிங் மேற்பார்வையாளர் காலிப்பணியிடங்கள் 118, தொழிலாளர் கூட்டுறவு அதிகாரி காலிப்பணியிடங்கள் 30, உதவி தொழிலாளர் ஆய்வாளர் காலிப்பணியிடங்கள் 28 உள்பட 23 வகையான 1,199 காலிப்பணி இடங்களை நிரப்புவதற்கு குரூப்-2 தேர்வு நடத்தப்படுகிறது.

இந்த தேர்வுக்காக கடந்த மாதம் 10-ந்தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி ஆன்லைனில் பட்டதாரிகள் விண்ணப்பித்து வந்தனர். விண்ணப்பிக்க கடந்த 9-ந்தேதி கடைசி நாள் ஆகும். கடைசி நாள் வரை இந்த தேர்வுக்கு 6 லட்சத்து 41 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அதாவது ஒரு பணியிடத்திற்கு 535 பேர் போட்டிப்போடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்வுக்கான முதல்நிலை எழுத்து தேர்வு வருகிற நவம்பர் மாதம் 11-ந்தேதி நடைபெறுகிறது. அந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மை தேர்வு நடத்தப்படும்.அந்ததேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்படும். அந்த தேர்வில் வெற்றிபெற்றவர்கள் இறுதியாக தேர்வு செய்யப்படுவார்கள்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One