ஈரோடு மாவட்டம், பள்ளிக்கல்வித்துறை சார்பில், குறுமைய அளவிலான விளையாட்டு போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா, நம்பியூர் அருகே வேமாண்டம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பரிசு வழங்கி, பேசியதாவது: மத்திய அரசு கொண்டு வரும் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க இரண்டாண்டு காலமாகும். ஆனால், எட்டு மாதத்தில் மாற்றி அமைக்கப்பட்ட பாடத்திட்டத்தை கண்டு மத்திய அமைச்சரே பாராட்டியுள்ளார்.
அடுத்தாண்டே எட்டு வகுப்புகளுக்கும் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும் போது, நாடே ஒரு புரட்சியே ஏற்படும். பிளஸ் 2 முடித்தாலே, அனைவருக்கும் வேலைவாய்ப்பு உத்தரவாதம் அளிக்கும் கல்வியாக மாற்றி அமைக்கப்படும். ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரை, தனியாரை மிஞ்சும் அளவுக்கு, அடுத்தாண்டு சீருடைகள் மாற்றி அமைக்கப்படும்.மாணவர்களின் எதிர்காலம் தான் எங்களுடைய இதயம். நீங்கள் கவலைப்பட தேவையில்லை, எங்கள் இதயம் துடிக்க, எதிர்காலத்தில் எங்கள் லட்சிய பயணம் தொடரும். பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்க இந்த அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment