அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க, 'டிஜிட்டல் எக்ஸ்பீரியன்ஸ் மையம்' அமைக்க மாநகராட்சி, ஒப்பந்த புள்ளி கோரியுள்ளது. சென்னை மாநகராட்சியின், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் வாயிலாக, அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும், 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களை ஊக்குவிக்க, அதிநவீன தகவல் தொழில்நுட்ப வசதிகள் அடங்கிய, 'டிஜிட்டல் எக்ஸ்பீரியன்ஸ் மையம்' அமைக்க, மாநகராட்சி
ஒப்பந்தம் கோரியுள்ளது.
இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை மாநகராட்சியின், ரிப்பன் மாளிகை வளாகத்தில், 'டிஜிட்டல் எக்ஸ்பீரியன்ஸ் மையம்' அமைக்கப்படும். இந்த மையம், அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டதாக இருக்கும்.
ஒருவர், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை படைக்க விரும்பினால், மையத்தில் அமைக்கப்பட்டிருக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.
மேலும், உருவாக்கிய கண்டுபிடிப்புகளை சோதனை செய்து பார்க்கவும், பல்துறை வல்லுனர்கள் முன்னிலையில், '3டி' தொழில்நுட்பத்தில் செயல்முறை விளக்கம் அளிக்கவும் முடியும்.
இந்த திட்டம், இரண்டு கட்டங்களாக செயல்
படுத்தப்பட உள்ளன. முதலில், மையம் அமைப்பது, தேவையான தொழில்நுட்பம் வழங்குவது, மையத்தை சோதனை செய்வது ஆகிய பணிகள், நான்கு மாதங்களில் முடிக்கப்படும்.
அதன்பின், மையத்திற்கான ஆட்கள், நிர்வாகம் மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட பணிகள், எட்டு மாதங்களில் முடிக்கப்படும்.
இதற்கான, ஒப்பந்தம் தொடர்பான ஆலோசனை கூட்டம், நேற்று முன்
தினம் நடைபெற்றது. அக்., 12ம் தேதிக்குள்
ஒப்பந்த நிறுவனம் தேர்ந்தெடுக்கப்படும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்
No comments:
Post a Comment