எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

சமூக வலைதளங்களுக்கு தேர்தல் கமிஷன் கட்டுப்பாடு

Thursday, September 6, 2018




2019 ம் ஆண்டு லோக்சபா
மற்றும் மாநில சட்டசபை தேர்தலுக்கான வேலைகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. இதற்காக பிரபல சமூக வலைதளங்களான பேஸ்புக், கூகுள், டுவிட்டர் ஆகிய நிறுவனங்களுடன் தேர்தல் கமிஷன் ஆலோசித்து வருகிறது.

தேர்தல் சமயங்களில் அரசியல் சார்ந்த விளம்பரங்கள், பிரசார வாசகங்களை கண்காணிக்கவும், போலியான செய்திகள், அவதூறு பரப்பும் வகையிலான விமர்சனங்கள் மற்றும் ஆட்சேபத்திற்குரிய வகையிலான கருத்துக்களை முடக்க முடிவு செய்துள்ளன. தேர்தல் சமயங்களில் அரசியல் சார்ந்த விளம்பரங்களை ஆன்லைனில் பதிவிடுவதை தடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சில நிறுவனங்கள் சில அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளருக்கு ஆதரவாக பணம் அளித்து விளம்பரம் கொடுப்பதாகவும், பணம் கொடுத்து சில வாசகங்களை பதிவிடுவதாகவும் பேஸ்புக், வாட்ஸ்ஆப், கூகுள், டுவிட்டர் நிறுவனங்கள் தேர்தல் கமிஷனிடம் முறையிட்டுள்ளன. ஆபாச கருத்துக்கள் மற்றும் எதிர்மறையான விளம்பரங்களை தானாக முன்வந்து முடக்கும்படி சமூக வலைதளங்களுக்கு தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது.
ஆரோக்கியமான பிரசாரங்களுக்கு மட்டுமே துணைநிற்க வேண்டும் எனவும், தனிநபரை விமர்சிப்பது, ஆபாசமாக கருத்து கூறுவது, அவதூறு பரப்புவது போன்ற வாசகங்களை தேர்தல் நடப்பதற்கு 48 மணிநேரத்திற்கு முன்னரே தடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One