இடைநிலை ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வுகளை ரத்து செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சரின் ஒப்புதலுடன் இதுகுறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.
முன்னதாக, புதுச்சாம்பள்ளியில் உள்ள பள்ளியில் மத்திய அரசின் அட்டால் டிங்கரிங் ஆய்வகத்தை திறந்துவைத்த செங்கோட்டையன், ஏழை மாணவர்களுக்கு இதுபோன்ற உபகரணங்கள் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment