பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:
திருக்குறள்:59
புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.
புகழைக் காக்க விரும்பும் மனைவி இல்லாதவர்க்கு, இகழ்ந்து பேசும் பகைவர் முன் காளை போல் நடக்கும் பெருமித நடை இல்லை.
பழமொழி :
Brids of same feather flock together
இனம் இனத்தோடு சேரும்
பொன்மொழி:
வாழ்க்கை என்பது ஒரு சுமை, அதைத் தாங்கிக் கொள்; அது ஒரு முள் கிரீடம் அதை அணிந்து கொள்.
- அப்ராம் ரியான்
இரண்டொழுக்க பண்பாடு :
1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .
2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .
பொது அறிவு :
1.பிரான்ஸ் நாட்டின் தலைநகர்?
பாரிஸ்
2.மலேசியாவின் தலைநகர்?
கோலாலம்பூர்
நீதிக்கதை
இராஜாங்க விருந்து
ஒரு நாள் அரன்மனையில் பெரிய விருந்து நடந்தது. ராஜகுருவும் தெனாலிராமனும் ருசித்து, ரசித்து உண்டு மகிழ்ந்தார்கள்.
விருந்துக்குப் பின் இருவரும் ஒரு மண்டபத்தில் அமர்ந்து சாவதானமாக பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது ராஜகுரு "இது போன்ற விருந்து உடலுக்கும் உள்லத்துக்கும் நல்ல சுகம் அளிக்கிறது" என்றார்.
இதைக் கேட்ட தெனாலிராமன் அவரை சீண்டிப்பார்க்க தீர்மானித்தார். "உண்பதை விட, உண்டதைக் கழிப்பதில் தான் தனிச் சுகம் இருக்கிறது" என்றார் தெனாலிராமன்.
ராஜகுருவோ சற்று முறைப்பாக "ராஜாங்க விருந்தைப் பழிக்காதே ராமா! இது போன்ற விருந்தை உண்பதே தனி சுகம் தான்" என்றார்.
தெனாலிராமனோ "கொண்டதை விட கழிப்பதில் தனிசுகம் இருக்கிறது என்பதை நான் ஒரு நாளைக்கு உங்களுக்கு உணர்த்துகிறேன்" என்று கூறி அங்கிருந்து சென்று விட்டார்.
ராஜகுரு ஒரு நாள் ஒரு தனியறையில் இருந்த சமயம் பார்த்து வெளியே பூட்டி விட்டார் தெனாலி ராமன். உள்ளேயிருந்த குருவுக்கு மலம் கழிக்க வேண்டிய அவசியம் வந்து விட்டது. கதவு வெளியே பூட்டப்பட்டிருந்ததால் அவர் பல முறை தட்டினார். பலனில்லை. அவசரத்தில் தவியாய் தவித்துக் கொண்டிருந்தார்.
அவரை நன்றாக தவிக்க விட்டு, கொஞ்ச நேரம் கழித்து தெனாலிராமன் கதவைத் திறந்தான். அவர் வேகமாக வெளியே வந்து கழிவரை நோக்கி ஓடினார்.
சிறிது நேரம் கழித்து வெளியே வந்த ராஜகுரு தெனாலிராமனைப் பார்த்து மூச்சு வாங்கப் பேசினார். "அப்பாடா! ராமா! கழிப்பது தனிசுகம் தான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் இது போன்ற விபரீத விளையாட்டை இனிமேல் செய்யாதே" என்றார்.
தெனாலிராமன் தான் சொன்னதை செய்துகாட்டிவிட்டதை நினைத்து இருவரும் அடக்க முடியாமல் சிரித்தனர்.
இன்றைய செய்தி துளிகள்:
1. நவம்பர் 1-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்: போக்குவரத்து தொழிலாளர்கள் அறிவிப்பு
2.தமிழகத்திற்கு 'ரெட் அலர்ட்' ....... அக்.7-ம் தேதி 25 செ.மீ. மழைபெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
3.பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 குறைப்பு : மத்திய அரசு உத்தரவு!
4.யூடியூப் மூலம் மாணவர்கள் கல்வி கற்கும் முறை வரும் கல்வியாண்டு முதல் அமல் : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
5.மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி : இந்திய அணி 364/4
No comments:
Post a Comment