சேலம் மாவட்டத்தில் 1,101 சத்துணவு பணிகளுக்கு 13,498 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான நேர்காணல் வரும் நவம்பர் மாதம் 12மற்றும் 13ம்தேதிகளில் நடக்கிறது.
சேலம் மாவட்டத்தில் 316 சத்துணவு அமைப்பாளர், 785 சமையல் உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்ப, மாநகராட்சி அலுவலகம், 20 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் கடந்த 1 முதல் 15ம் தேதி வரை விண்ணப்பங்கள் இலவசமாக விநியோகிக்கப்பட்டன. 16ம் தேதி வரை பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அமைப்பாளர் பணிக்கு 8,236 பேர், உதவியாயர் பணிக்கு 5,260 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு நேர்முக அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. நவம்பர் 12, 13ம் தேதிகளில் அமைப்பாளர் பணிக்கும், 14ம் தேதி சமையல் உதவியாளர் பணிக்கும் நேர்முக தேர்வு அந்தந்த ஒன்றிய அலுவலகங்களிலும், மாநகராட்சி அலுவலகத்திலும் நடத்தப்படவுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
No comments:
Post a Comment