எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தாமிரபரணி மகாபுஷ்கர விழா நாளை தொடக்கம்

Wednesday, October 10, 2018

 




பாபநாசம்: 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தாமிரபரணி மகா புஷ்கர விழா நாளை தொடங்குகிறது. தாமிரபரணி சமவெளியில் தொடங்கும் பாபநாசம் முதல் கடலில்சேரும் குன்னக்காயல் வரையிலான 185 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள 144 படித்துறைகளிலும் அதிகாலையிலேயே விழா தொடங்குகிறது. குருபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்வதையொட்டி தாமிரபரணி புஷ்கரவிழா கொண்டாடப்படுகிறது.

27-ம் தேதி வரை விழா நடைபெறுவதால் தாமிரபரணியில் நீராட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் துறவிகள், மடாதிபதிகள் நெல்லைக்கு செல்கின்றனர். ஆயிரக்கணக்கானோர் வருவதால் மகாபுஷ்கர விழாவிற்கு 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். புஷ்கர விழாவில் பங்கேற்பதற்காக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நாளை பாபநாசம் செல்கிறார். விழாவையொட்டி சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சிறப்பு பேருந்துகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.




No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One