எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பதிவு செய்தது 152 மாணவர்கள் ! வந்ததோ இரண்டே பேர்! 'நீட்' பயிற்சிக்கு 'சாடிலைட் லிங்க்' கிடைப்பதில் சிக்கல்

Monday, October 22, 2018



அன்னுார் வட்டாரத்தில், 'நீட்' பயிற்சிக்கு, சாடிலைட் லிங்க் கிடைக்காததால், ஆசிரியர்கள் நேரடியாக வகுப்புகளை நடத்துகின்றனர். நேற்று இரண்டு பேர் மட்டுமே, பயிற்சி வகுப்புக்கு வந்திருந்தனர். பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழகத்தில், அரசு, அரசு உதவி பெறும், 412 பள்ளிகளில், நீட் மற்றும் ஜே.இ.இ., பயிற்சி மையங்கள் 
அமைக்கப்பட்டுள்ளன.முன்னணி பயிற்சி நிறுவனங்களுடன், பல கோடி ரூபாய் செலவில் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒப்பந்தபடி, சாடிலைட் லிங்க் உதவியுடன், தனியார் பயிற்சி நிறுவனங்கள், 412 மையங்களிலும் பயிற்சி தர வேண்டும்.அன்னுார் அரசு மேல்நிலைப்பள்ளி மையத்தில், சொக்கம்பாளையம், காந்திஜி அரசு மேல்நிலைப்பள்ளி, காட்டம்பட்டி, அன்னுார், ஆணையூர் அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் கே.ஜி.பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்இருந்து, நீட் மற்றும் ஜே. இ.இ., பயிற்சியில் பங்கேற்க, 152 பேர் பெயர் பதிவு செய்துள்ளனர்.சராசரியாக, 70 சதவீதம் பேர் பயிற்சிக்கு வந்து கொண்டிருந்தனர். 'வி சாட் சாடிலைட் மூலம், பள்ளியில் புரஜெக்டர், ஸ்கிரீன் அமைத்து பயிற்சி தரப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக அன்னுார் பள்ளி மையத்தில், புரஜெக்டர் மற்றும் ஸ்கிரீன் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் சாடிலைட் தொடர்பு ஏற்படுத்தப்படவில்லை.பயிற்சி துவங்கி, ஒரு மாதத்துக்கு மேலாகியும், ஆசிரியர்கள் வழக்கமான நேரடி முறையில்தான் கற்பிக்கின்றனர். இந்த சாதாரணநேரடி வகுப்பினால் மாணவர்கள், ஆர்வம் இழந்து விட்டனர்.இதனால், நேற்று நடந்த நீட் மற்றும் ஜே.இ.இ., பயிற்சிக்கு, இரண்டு மாணவியர் மட்டுமே வந்திருந்தனர். பதிவு செய்த, 152 பேரில் இரண்டு பேர் மட்டும் வந்ததால், ஆசிரியர்களும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளனர்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One