எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

மறைந்த முன்னாள் ஜனாதிபதி, அப்துல் கலாமின் பிறந்த நாளான, வரும், 15ம் தேதியன்று, இளைஞர் எழுச்சி நாள் கொண்டாட, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவு

Friday, October 12, 2018



மறைந்த முன்னாள் ஜனாதிபதி, அப்துல் கலாமின் பிறந்த நாளான, வரும், 15ம் தேதியன்று, இளைஞர் எழுச்சி நாள் கொண்டாட, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: 'ஏவுகணை நாயகன்' என, அனைவராலும் அழைக்கப்படும், மறைந்த முன்னாள் ஜனாதிபதி, அப்துல் கலாமின் பிறந்த நாள், வரும், 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளை, இளைஞர் எழுச்சி நாளாக கடைப்பிடிக்க, அரசு ஆணையிட்டுள்ளது.

எனவே, அனைத்து பள்ளிகளும், இன்று முதல் வரும், 15ம் தேதி வரை, அப்துல் கலாம் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். இன்று முதல், பள்ளிகள் அளவிலும், மாவட்ட அளவிலும், பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகள் நடத்த வேண்டும்.

வரும், 15ம் தேதி, மாநில அளவிலான இறுதி போட்டி நடத்தி பரிசளிக்க வேண்டும். நாளை முதல், 15ம் தேதி வரை, பிர்லா கோளரங்கில் நடத்தப்படும், சிறப்பு விண்வெளி அறிவியல் காட்சிகளை, மாணவர்கள் பார்க்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு, ராமேஸ்வர முருகன் கூறியுள்ளார்



No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One