அரசாணையை எதிர்பார்த்துள்ள (16/11/2012 க்கு முன்பு பணி நியமனம் பெற்ற) TET நிபந்தனை ஆசிரியர்கள் கூட்டம் - திருச்சியில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.
TNTET நிபந்தனை ஆசிரியர்களின் வழக்கு கடந்த 07/09/2018 அன்றைய சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் இந்த TET சிக்கலில் தவித்து வந்த ஆசிரியர்களுக்கு சாதகமானதால் விரைவில் அரசாணை வெளியிட 16/11/2012 க்கு முன்பு பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் தமிழக கல்வித்துறையிடம் கோரிக்கை விடுத்தல் தொடர்பான அவசரக்கூட்டம் திருச்சியில் வரும் 28/10/18 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
16/11/2012க்கு முன்பு பணியில் சேர்ந்த பல ஆசிரியர்கள் TNTET நிபந்தனைகளுக்குள்
கொண்டுவரப்பட்டதும்
அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் TET நிபந்தனை ஆசிரியர்கள் பணியிடம் நிரப்புதல் குறித்த தமிழக பள்ளிக்கல்வித் துறை இயக்ககம் கடந்த 16/11/2012 ஆம் தேதியிட்ட செயல்முறைகள் ஒன்றும் வெளியிட்டது.
அதன்படி இனிமேல் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆசிரியர் பணியிடம் நிரப்பும் போது TET தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே நிரப்ப வேண்டும் என்று அறிவித்தது.
இந்த செயல்முறைக்குப் முன்பு பணி நியமனம் பெற்றவர்களுக்கு முறையாக கொடுக்கப்பட வேண்டிய ஊதியம் மற்றும் இதர பலன்கள் ஒருசில மாவட்டங்களில் தர மறுக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட காலத்திற்கு முன்பு பணி நியமனம் பெற்றவர்களுக்கு TNTET லிருந்து விலக்கு கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
கடந்த மாதம் சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பின்படி நான்கு மாதங்களில் மற்ற ஆசிரியர்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் ஒரு நல்ல தீர்வை தமிழக அரசு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.
ஆகவே TNTET நிபந்தனை ஆசிரியர்கள் தனிப்பட்ட முறையில் (individual representation) தமிழக அரசுக்கு அளித்து வருகின்றனர்.
இது தொடர்பான அரசாணை விரைந்து வெளியீடு செய்து தருமாறு மாண்புமிகு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை மீண்டும் சந்தித்து வேண்டுகோள் விடுக்கவும் இந்த சிக்கல்களைத் தீர்க்க செயல்பட்ட ஆசிரியர்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. மேலும் இவ்வமைப்பு கூறுவது யாதெனில் அரசாணை வெளியீடு தொடர்பான கடந்த 07--09--2018 அன்று வெளிவந்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கு போட்ட எந்தவொரு ஆசிரியரும் பாதிக்கப்படாதவாறான நாளான
16/11/2012 ற்கு முன்பு ஆசிரியர் பணியில் சேர்ந்த அனைவரும் INDIVIDUAL REPRESENTATION ஐ தங்கள் பங்குக்கு விரைந்து செய்து முடிக்க வேண்டுமாய் ஏற்கனவே கேட்டுக் கொண்டதன் பேரில் பலரும் தங்கள் பங்களிப்பு தந்து வருகின்றனர்.
கடந்து ஒருசில வருடங்களாக தமிழக அரசு வெளிவிடும் அரசாணைகள் வழக்கு தொடுத்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று வருவதால் இந்த பிரச்சனையிலும் இதேநிலை தொடர வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது.
ஆகவே அரசாணை வெளிவிடும் தமிழக அரசின் கவனத்தில் கொண்டு செல்லும் விதமாக வரும் ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் ஒரு மாபெரும் கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதில் 16/11/2012 க்கும் முன்பு அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணி நியமனம் பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் ( வழக்கு போட்டவர்கள் + வழக்கு போடாதவர்கள் ) கட்டாயம் கலந்து கொண்டு நமது அடுத்த கட்ட நகர்வில் இடம்பெற வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இடம் : திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் வழியில் உள்ள உறையூர் காவல் நிலைய பேருந்து நிலையம் அருகில்.
நாள் : 28/10/2018
நேரம் : காலை 10 மணி.
மேலும் விபரம் அறிய :
மதுரை சிவஞானம் :9944246797
திருச்சி பூபதி : 9443826203
கோவை சந்துரு : 7708582806
No comments:
Post a Comment