எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

மே, 19ல், ஜே.இ.இ., தேர்வு

Tuesday, October 30, 2018




'பிளஸ் 2 மாணவர்கள், ஐ.ஐ.டி.,யில் சேர்வதற்கான, ஜே.இ.இ., 'அட்வான்ஸ்டு' தேர்வு, மே, 19ல் நடக்கும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், இந்திய உயர்கல்வி தொழில் நுட்ப நிறுவனமான, ஐ.ஐ.டி.,க்களில் சேர்வதற்கு, இரண்டு கட்ட நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதில், முதல் கட்டமான, ஜே.இ.இ., முதன்மை தேர்வை, என்.டி.ஏ., எனப்படும், தேசிய தேர்வு முகமை நடத்துகிறது.நடப்பு கல்வி ஆண்டுக்கான, ஜே.இ.இ., முதன்மை தேர்வு, முதலாவதாக, ஜன., 6 முதல், 20 வரையிலும்; இரண்டாவதாக, ஏப்., 6 முதல், 20 வரையிலும் நடத்தப்படுகிறது. இதில், ஜனவரி தேர்வுக்கான ஆன்லைன் பதிவுகள், செப்டம்பரில் முடிந்து விட்டன.இரண்டாம் முறை தேர்வுக்கு, பிப்., 8ல் ஆன்லைன் பதிவு துவங்குகிறது. இதில், ஒரு முறையாவது பங்கேற்று தேர்ச்சி பெற்றால், அவர்கள், அட்வான்ஸ்டு தேர்வில் பங்கேற்கலாம்.அந்த, ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வு, மே, 19ல் நடத்தப்படும் என, இந்த ஆண்டு தேர்வை நடத்தும், ரூர்கி ஐ.ஐ.டி., நேற்று அறிவித்துள்ளது. இந்த தேர்வு, கணினி முறையில் மட்டுமே நடத்தப்படுகிறது. விபரங்களை, https://jeeadv.ac.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One