பள்ளிகள் இயக்குனர் பள்ளி ஒருங்கிணைப்பாளர்
வேலூர்: தரம் உயர்த்தப்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு 22ம் தேதி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் நடத்தப்படுகிறது. 2018-19ம் கல்வி ஆண்டில் மாநிலம் முழுவதும் 95 ஒன்றிய, நகராட்சி மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் வரும் 95 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்ந்தன. அரசு மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து பிரித்து 5 மகளிர் உயர்நிலைப்பள்ளிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. 2018-2019ம் கல்வி ஆண்டில் 95 அரசு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்ந்தன.
இவ்வாறு மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ள உயர்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு மட்டும் 2018-19ல் புதிதாக தரம் உயர்த்தப்பட்ட மற்றும் தற்போது காலியாக உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிகளுக்கு ஆன்லைன் கலந்தாய்வு மூலம் மாறுதல் வழங்குவதற்காக அவர்கள் சார்ந்த விவரங்கள் முதன்மை கல்வி அலுவலர்களால் பெறப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இவர்களுக்கான ஆன்லைன் மூலம் கலந்தாய்வு வரும் 22ம் தேதி காலை 9.30 மணியளவில் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடக்கிறது. அதற்கேற்ப கலந்தாய்வுக்கான உரிய ஏற்பாடுகளை செய்து தயார் நிலையில் வைக்கும்படி அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனரகம் கேட்டுக் கொண்டுள்ளது
No comments:
Post a Comment