தமிழக வனத் துறையில் காலியாக உள்ள வனவர், வனக் காப்பாளர் உள்ளிட்ட 1,178 காலிப் பணியிடங்களுக்கான இணையவழித் தேர்வுகள் நவம்பர் 24, 26, 27-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளன.
வனத் துறையில் காலியாக உள்ள 300 வனவர், 726 வனக் காப்பாளர்கள், 152 ஓட்டுநர் உரிமத்துடன்கூடிய வனக் காப்பாளர் பணியிடங்களுக்கு கடந்த அக்டோபர் 15 -ஆம் தேதி முதல் நவம்பர் 5 -ஆம் தேதி மாலை 5 மணிக்குள் www.forests.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்தது.
1.6 லட்சம் பேர்: இதையடுத்து, அக்டோபர் 15 -ஆம் தேதி முதல் செவ்வாய்க்கிழமை வரை (அக். 30) வனவர் பணியிடத்துக்கு 85 ஆயிரம் பேரும், வனக் காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் பணியிடங்களுக்கு 75 ஆயிரம் பேரும் என மொத்தம் 1.6 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
நவ.24-இல்: இதில், வனவர் பணியிடத்துக்கு நவம்பர் 24 -ஆம் தேதியும், வனக் காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன்கூடிய வனக் காப்பாளர் பணியிடங்களுக்கு நவம்பர் 26, 27 -ஆம் தேதிகளிலும் இணையதளம் மூலம் தேர்வுகள் நடைபெற உள்ளதாக, தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வனத் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, தற்போதுவரை சமர்ப்பிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, அவை ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கான தகவல் விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது என்றார் அவர்
No comments:
Post a Comment