எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

தங்கம் விலை தொடர்ந்து உயர்வு சவரன் 24,000ஐ தாண்டியது : ஒரு வாரத்தில் ₹744 அதிகரிப்பு

Sunday, October 7, 2018



தங்கம் நேற்று சவரன் ரூ.24,000ஐ
தாண்டியது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூ.744 வரை உயர்ந்துள்ளது. கடந்த 1ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.23,320க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு 2ம் தேதி ஒரு சவரன் ரூ.23,504, 3ம் தேதி ரூ.23,776, 4ம் தேதி ரூ.23,792 என்று தங்கம் விலை உயர்ந்து வந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.2,988க்கும், ஒரு சவரன் ரூ.23,904க்கும் விற்கப்பட்டது.

 நேற்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அதாவது, கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.3,008க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.24,064க்கும் விற்கப்பட்டது. தங்கம் சவரனுக்கு ரூ.24 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. கடந்த 1ம் தேதி முதல் நேற்று வரை 6 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.744 அளவுக்கு உயர்ந்துள்ளது.இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை நாளாகும். அதனால், இன்றைய தினம் நேற்றைய விலையிலேயே தங்கம் விற்பனையாகும். திங்கட்கிழமை தங்கம் மார்க்கெட் தொடங்கியதும் விலை மேலும் உயருமா என்பது தெரிய வரும்.
தங்கம் விலை கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி ஒரு சவரன் ரூ.24,480க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு நவம்பர் 10ம் தேதி ரூ.24,184, நவம்பர் 19ம் தேதி ரூ.24,040க்கும் விற்கப்பட்டது. அதன் பிறகு இந்தாண்டு மே மாதம் 12ம் தேதி தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. அதாவது சவரன் ரூ.24,120க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு 6 மாதங்களுக்கு பிறகு தங்கம் விலை தற்போது ரூ.24,000ஐ தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One