எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

4 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்!

Thursday, October 18, 2018




4 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்! அரசு மேல்நிலைப் பள்ளியின் அவலம்
குன்னுார் அரசு அறிஞர் அண்ணா
மேல்நிலைப்பள்ளியில், நான்கு மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் பணி செய்யும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.குன்னுார் நகரில் உள்ள அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளி, 66 ஆண்டுகள் பழமையானது. இங்கு கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்றனர்.நாளுக்கு நாள் தனியார் பள்ளிகளை பெற்றோர் நாடி செல்ல துவங்கியதால், இப்பள்ளிக்கு வரும் மாணவர் எண்ணிக்கை குறைந்து, 300ஐ தொட்டது. 2002ல் மாணவர்கள் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதால், 55 மாணவியர் உட்பட 390 பேர் சேர்க்கப்பட்டனர்.இந்நிலையில், எந்த நடவடிக்கையும் எடுக்காததால், தற்போது, இங்கு, 6ம் வகுப்பில் இருந்து பிளஸ்-2 வகுப்பு வரை மொத்தம், 74 மாணவ, மாணவியர் மட்டுமே பயில்கின்றனர். 18 ஆசிரியர், ஆசிரியைகள் பாடங்களை நடத்துகின்றனர். இதன் அருகில் உள்ள ஆரம்ப பள்ளியில், 6 மாணவ, மாணவியருக்கு இரு ஆசிரியர்கள் உள்ளனர்.பிளஸ்-2 வகுப்பில், 17 பேரும், 10ம் வகுப்பில் 15 பேர் மட்டுமே தேர்வுக்கு தயாராகின்றனர்.டாக்டர்கள், பொறியாளர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், விளையாட்டு வீரர்கள் என பல சாதனையாளர்களை உருவாக்கிய இந்த பள்ளி, தற்போது மூடும் அபாயத்தை நோக்கி செல்கிறது.ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் மனோகரன் கூறுகையில், ''அரசு அனுமதித்துள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு ஏற்ப மாணவர்களை சேர்க்காமல், தனியார் பள்ளிகளில் கூடுதலாக மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இதுபோன்ற காரணங்களால், இதுபோன்று பல அரசு பள்ளிகள் மூடு அபாயத்தை நோக்கி செல்கின்றன. இத்தகைய பள்ளி களை காத்து, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One