விஜயதசமி பண்டிகை கால மாணவர் சேர்க்கையில், தமிழக பள்ளிகளில், 6,000 மாணவர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் செயல்படும், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில், தமிழக பாடத்திட்டத்தின் படி, வகுப்புகள் நடத்தப்படுகின்றன.இந்த வகுப்புகளில், ஏப்ரல் முதல், மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
நடப்பு கல்வி ஆண்டில், ஏற்கனவே மாணவர் சேர்க்கை முடிந்து, மாணவர்களுக்கு, காலாண்டு மற்றும் முதல் பருவ தேர்வும் முடிந்து விட்டது.இந்நிலையில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பதால், கூடுதல் மாணவர்களை சேர்த்து கொள்ள, அவகாசம் வழங்கப்பட்டது. விஜயதசமி பண்டிகையை யொட்டி, தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில், புதிய மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்குமாறு, தொடக்க கல்வி இயக்குனர், கருப்பசாமி உத்தரவிட்டார்.அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு, ஆசிரியர்கள் செல்ல வேண்டும். பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை கண்டுபிடித்து, அவர்களை, அக்., 31 வரை, பள்ளிகளில் சேர்க்க, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப் பட்டது.
இதன்படி, நேற்று வரை, 6,369 மாணவர்கள் புதிதாகசேர்ந்துள்ளனர். இதில், அரசு தொடக்க பள்ளிகளில், 2,291; அரசு உதவி பெறும் பள்ளிகளில், 735 பேர் என, 3,026 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளில், எல்.கே.ஜி., யில், 2,703 மற்றும் யு.கே.ஜி.,யில், 640 மாணவர்கள் என, 3,343 பேர் சேர்ந்துள்ளனர். இவர்களுக்கு, இலவச நல திட்டங்களை செயல்படுத்தவும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்
No comments:
Post a Comment