தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு எனும் திட்டத்தின் கீழ் 1,330 குறட்பாக்களையும் ஒப்புவித்த 70 மாணவர்களுக்கு தலா ரூ.10,000 பரிசு, இனிப்பு, பாராட்டுச் சான்றிதழை வெள்ள
திருக்குறள் ஒப்புவித்தல் திட்டத்தின் கீழ், தமிழகத்தைச் சேர்ந்த 70 மாணவ-மாணவிகளுக்கு தலா ரூ.10,000 பரிசு வழங்கப்பட்டது.
தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் பரிசுக்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை முதல்வர் பழனிசாமி அளித்தார்.
இது குறித்து தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-திருக்குறளில் உள்ள அனைத்து குறள்பாக்களையும் ஒப்புவிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஆண்டுதோறும் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
2011-12-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் 36 பேருக்கு வழங்கப்பட்டு வந்தது. இந்த எண்ணிக்கை அண்மைக் காலத்தில் அதிகரிக்கப்பட்டு 70-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை 329 பேருக்கு குறள் ஒப்புவித்தல் பரிசுத் தொகை அளிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் நிகழ் நிதியாண்டில் அனைத்துக் குறள்களையும் ஒப்புவித்த 70 மாணவ-மாணவியர்கள் தேர்வு செய்யப்பட்டு, குறள் ஒப்புவித்தல் பரிசு ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10,000 வீதம் மொத்தம் ரூ.7 லட்சத்துக்கான காசோலைகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் முதல்வர் பழனிசாமி வெள்ளிக்கிழமை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் க.பாண்டியராஜன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment