கடந்த 70 ஆண்டுகளில் முதல் முறையாக இலக்கியத்துக்கான நோபல் பரிசு தவிர்க்கப்பட்ட நிலையில் நோபல் பரிசு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உலகின் மிகவும் உயர்ந்த விருதாக கருதப்படுவது நோபல் பரிசு. இயற்பியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் அரிய சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்படுகிறது.
ஆல்பிரட் நோபெல் என்ற வேதியியல் அறிஞர் பெயரால் 1895ம் ஆண்டு முதல் இப்பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
ஸ்வீடன் அகாடமி, ரோயல் சுவீடிய அறிவியல் கழகம், கரோலீன்ஸ்கா கல்வி நிலையம், நோர்வே நோபல் குழு உள்ளிட்டவைகள் இணைந்து நோபல் பரிசை வழங்கி வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு அறிவிப்பு வெளியாகி கொண்டிருக்கிறது. கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு முதல் முறையாக இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கும் நடவடிக்கை இந்த ஆண்டு தவிர்க்கப்பட்டுள்ளது.
ஸ்வீடிஷ் அகாடமியின் தேர்வுக்குழு உறுப்பினர் காத்தீரனா பிராஸ்டென்சன் கணவர் மீது பாலியல் புகார் எழுந்த காரணத்தினால் இரண்டு ஆண்டுகளுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படாது என கடந்த மே மாதம் அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதன்படி இந்த ஆண்டு இலக்கியத்துறைக்கான நோபல் பரிசு தவிர்க்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment