எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கணினி வழியில் பாடங்கள்: அமைச்சர் செங்கோட்டையன்

Monday, October 22, 2018



விருதுநகர் அருகே உள்ள 'ஏஏஏ' பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆசிரியை ஒருவருக்கு கனவு ஆசிரியர் விருதை வழங்கிய அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், கே.டி. ராஜேந்திர பாலாஜி, ராஜலெட்சு
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கணினி வழியில் பாடங்கள் பயிற்றுவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
விருதுநகர் அருகே உள்ள ஆமத்தூர் "ஏஏஏ' பொறியியல் கல்லூரியில் மண்டல அளவில் கல்வி அலுவலர்களுக்கான திறன் வளர் பயிற்சி, கனவு ஆசிரியர் விருது, புதுமை பள்ளி விருது வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர் பிரதீப் யாதவ் தலைமை வகித்தார். இதில், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களைச் சேர்ந்த 35 ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது, 10 பள்ளிகளுக்கு புதுமை பள்ளி விருதை அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், கே.டி. ராஜேந்திர பாலாஜி ஆகியோர் வழங்கினர்.
விழாவில், அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பேசியதாவது:
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. ஒன்பது, பத்தாம் வகுப்பு படிப்பவர்களுக்கு ஒரு சீருடை, பிளஸ் 1, பிளஸ் 2 படிப்பவர்களுக்கு ஒரு சீருடை, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலும் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஒரு சீருடை என மாற்றப்பட்டு, அடுத்த ஆண்டு முதல் அரசு சார்பில் வழங்கப்படும்.
மேலும், பள்ளிகளில் பொலிவுறு வகுப்புகள் செப்டம்பர் மாதத்துக்குள் உருவாக்கி தரப்படும். அதேபோல், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கணினி வழியே பயிற்றுவிக்கப்படும். ஆறாம் வகுப்பு, பிளஸ் 1 புதிய பாடத்திட்டத்தை பார்வையிட்ட சிபிஎஸ்இ குழுவினர், தரமானதாக உள்ளதாகப் பாராட்டினர்.
ஜிஎஸ்டி வந்த பிறகு ஆடிட்டர்களின் தேவை அதிகரித்துள்ளது. எனவே, 25 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு திறமையான 500 அறிஞர்களை கொண்டு பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
மேலும், பிளஸ் 2 படித்தவுடன் வேலை கிடைக்கும் வகையில் "ஸ்கில் டெவலப்மென்ட்' குறித்த 12 பாடத்திட்டங்களும் சேர்க்கப்பட உள்ளன.
பெரும்பாலான அரசு பள்ளி ஆசிரியர்களின் முக்கிய கோரிக்கை கழிப்பிட வசதி மற்றும் அதை சுத்தம் செய்வதற்கு பணியாளர்கள் நியமிக்க வேண்டும் என்பதே.
இதற்காக செப்டம்பர் இறுதிக்குள் ஜெர்மனி நாட்டிலிருந்து ஆயிரம் வாகனங்கள் வாங்க ரோட்டரி கிளப் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு வாகனத்தின் மூலம் தினமும் 20 பள்ளிகள் வரை கழிப்பறைகளை சுத்தம் செய்யலாம் என்றார்.
விழாவில், மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானம் வரவேற்றார். ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி, விருதுநகர் மக்களவை உறுப்பினர் ராதாகிருஷ்ணன், ஸ்ரீவில்லிபுத்தூர் எம்எல்ஏ சந்திரபிரபா, பள்ளி கல்வி இயக்குநர் வி.சி. ராமேஸ்வர முருகன், மெட்ரிக். பள்ளி இயக்குநர் ச. கண்ணப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் ஆனந்தகுமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One