'தீபாவளிக்கு முதல் நாளான, நவம்பர், 5ம் தேதி விடுமுறை நாள்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இது, அரசுஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பரிசாக கிடைத்துள்ளது.
தீபாவளி பண்டிகை, நாடு முழுவதும் வரும், 6ம் தேதி, செவ்வாய்கிழமை கொண்டாடப்படுகிறது. அதனால், திங்கள் கிழமையும் விடுமுறை கிடைக்குமா என, அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் எதிர்பார்த்தனர். இதுகுறித்து, நமது நாளிதழில், அக்., 27ல், செய்தி வெளியானது.இந்நிலையில், தீபாவளிக்கு முதல் நாளான, நவ., 5ம் தேதி, அரசு விடுமுறை என, தமிழக அரசு நேற்று அறிவித்தது. இதுகுறித்து, பொது துறை அரசு முதன்மை செயலர், செந்தில் குமார் பிறப்பித்துள்ள அரசாணை:பல்வேறு தரப்பு கோரிக்கைகளை, அரசு கவனமுடன் பரிசீலித்து, தீபாவளிக்கு முதல் நாளான, நவ., 5ல், தமிழகம் முழுவதும், மாநில அரசு நிறுவனங்களுக்கும், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும், உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், நவம்பர் மாத இரண்டாவது சனிக்கிழமையான, 10ம் தேதியை, பணி நாளாக எடுத்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த விடுமுறை, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தீபாவளி பரிசாக கிடைத்துள்ளது. தீபாவளிக்கு மறுநாள், 7ம் தேதி அமாவாசையாக இருப்பதால், அன்று வரையறுக்கப்பட்ட விடுமுறை எடுக்க விதிகள் உள்ளன. எனவே, தீபாவளி பண்டிகைக்கு, நவ., 3 முதல், 7 வரை, ஐந்து நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.
No comments:
Post a Comment