தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் நல்லாசிரியர் விருது வழங்க வேண்டும் என்று அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் நல்லாசிரியர் விருது வழங்க கோரிக்கை
பல்லடம்:
அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட பள்ளி தாளாளர்கள் கூட்டம் பல்லடம் ப்ளூபேர்ட் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில துணைத் தலைவர் குப்புராஜ் வரவேற்றார்.
மாநில நிறுவனத் தலைவர் பி.டி.அரசக்குமார் தலைமை வகித்து பேசியதாவது:-
பள்ளிக்கூடம் நடத்துவது என்பது தனிக்கலை ஆகும். பள்ளிக்கூடத்தை யார் வேண்டுமானாலும் எளிதாக ஒரு தொழில் நிறுவனத்தை போல் நடத்திட முடியாது. தங்களது குழந்தைகளை போல் பள்ளி மாணவ, மாணவிகளையும், தங்களது குடும்ப உறுப்பினர்களை போல் ஆசிரியர்களையும் நினைத்து பள்ளியை ஓர் குடும்பமாக பாவித்தால் தான் அதில் வெற்றி பெற முடியும். அதிக ஊதியம் பெறும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவிக்கப்படுவது போல் குறைந்த ஊதியத்தில் நிறைவான சேவையுடன் பணியாற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் அரசு நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவிக்க வேண்டும்.
தனியார் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்களது குடும்ப சூழ்நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அடிக்கடி பள்ளிகள் மற்றும் ஊர் இடம் பெயர்வர். எனவே பி.எப், மற்றும் இ.எஸ்.சி. காப்பீடு செய்வது குறித்து அரசு கட்டாயப்படுத்தக்கூடாது. தனியார் பள்ளிகள் ஆண்டு தோறும் அங்கீகாரம் பெறும் முறையை மாற்றி 3 ஆண்டுகளுக்கு ஒரு முறையாக மாற்றியை மத்திட வேண்டும்.
சி.பி.எஸ்.சி. பள்ளிகளுக்கு என்று தனியாக கல்விக் கொள்கையை அரசு உருவாக்க வேண்டும். தற்போது இயங்கி வரும் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி வளாகத்திலேயே தனி கட்டிடத்தில் சி.பி.எஸ்.சி. பள்ளி நடத்த முன்னுரிமை அளித்து அரசு அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு பேசினார்
இந்த கூட்டத்தில் திருப்பூர் மாவட்ட பொறுப்பாளர் லிங்கன், ப்ளூபேர்ட்பள்ளி தாளாளர் ராமசாமி, விவேகானந்தா பள்ளி தாளாளர் சுகந்தி முத்துக்குமார் உள்பட 30 பள்ளி தாளாளர்கள் கலந்துகொண்டனர்
Well said .Thank you sir for your concern.
ReplyDelete