எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

அனைத்து பள்ளிகளிலும் அறிவியல் கண்காட்சியினை கட்டாயம் நடத்த வேண்டும் - மாவட்ட ஆட்சியர்

Monday, October 15, 2018






அனைத்து பள்ளிகளிலும் அறிவியல் கண்காட்சியினை கட்டாயம் நடத்த வேண்டும் - மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ் பேச்சு.

புதுக்கோட்டை,அக்.15: அனைத்து பள்ளிகளிலும் அறிவியல் கண்காட்சியினை கட்டாயம் நடத்த வேண்டும் என  புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ் பேசினார்..

 புதுக்கோட்டை வருவாய் கல்வி   மாவட்டத்தின் சார்பாக 46ஆவது ஜவஹர்லால் நேரு  அறிவியல், சுற்றுப்புறக் கண்காட்சி மற்றும் கணிதக் கருத்தரங்கு திங்கள் கிழமை தூயமரியன்னை மேல்நிலைப் பள்ளியில்  நடைபெற்றது.

 கண்காட்சியினை பார்வையிட்டு வருவாய் மாவட்ட அளவில் சிறந்த படைப்புகளாக தேர்வு செய்யப்பட்ட 19 சிறந்த படைப்புகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசினை புதுக்கோட்டை  மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ் அவர்கள் வழங்கி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பேசியதாவது:புதுக்கோட்டை மாவட்ட்த்தில்  பள்ளி மாணவர்களை விஞ்ஞானிகளாக ஆக்க  ஊக்குவிக்கும் வகையில் அறிவியல் கண்காட்சி நடத்தப்படுகிறது.ஏற்கனவே நான் பல முறை பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளேன்.பள்ளி மாணவர்கள் அனைவரும் ஆர்வத்தோடு தங்களது செயலில் ஈடுபட வேண்டும்.ஒவ்வொரு மாணவனும் தங்களது திறமையை வெளிக்கொணர வேண்டும். அவ்வாறு வெளிக்கொணரும் போது மாணவர்களுக்கு தானாகவே விஞ்ஞான அறிவு கிட்டி விடும்.மேலும் அனைத்து பள்ளிகளிலும் அறிவியல் கண்காட்சியினை ஆசிரியர்கள் கட்டாயம் நடத்த வேண்டும் என்றார்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா  வரவேற்றுப் பேசினார்.











முன்னதாக  காலையில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியினை புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா தொடங்கி வைத்து பேசியதாவது:
 மாணவச் செல்வங்களுக்கு இன்றைய நாள் அருமையான நாள்.இன்று  டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம்  பிறந்த நாளில் அறிவியல் சார்ந்த கண்காட்சி நடைபெறுவது அனைவருக்கும்  மகிழ்வாக உள்ளது..இந்தியாவை உலகில் எல்லா வல்லரசு நாடுகளும் திரும்பி பார்க்க செய்த அற்புதமான மனிதர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் பிறந்த நாளான இன்று இளைஞர் எழுச்சிநாளாக கொண்டாடுவது மாணவர்களாகிய உங்களை பெருமை அடைய செய்வதற்கே .டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்கள் அருமையான விஞ்ஞானி மட்டுமல்ல,சிறைந்த படைப்பாளி,நல்ல உழைப்பாளியும் ஆவார்.இங்குள்ள அறிவியல் படைப்புகளை பார்க்கும் பொழுது நிறைய அப்துல்கலாம்களை ஆசிரியர்கள்  உருவாக்குவார்கள்  என எண்ணுகிறேன்..ஒரு கை தட்டினால் போதாது..ஆசிரியர்கள் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே முடியும்.. எனவே இங்குள்ள ஆசிரிய பெருமக்கள் அனைவரும் மாணவர்களின் புதிய எண்ணங்கள், புதிய படைப்புகள் உருவாக உறுதுணையாக இருப்பார்கள்..நீங்கள் இங்கு உங்களது படைப்புகளை கொண்டு வந்திருக்கும் போதே பாதி வெற்றி பெற்றுவிட்டீர்கள்..காரணம் நீங்கள் அனைவரும் மூன்று கல்வி மாவட்டத்தில் வெற்றி பெற்றி இன்று மீதி வெற்றியை எதிர் பார்த்து கொண்டிருக்க்கிறீர்கள்..இங்குள்ள ஆசிரியர்கள்  நீங்கள் பல அப்துல்கலாம்களை
விதைக்கலாம், உருவாக்கலாம் அதற்கு நீங்கள் உழைக்கலாம்.. மாணவர்களாகிய  உங்களுக்கு உங்களுடைய  ஆசிரியர்கள் எல்லாம்  மேலும் மேலும்
உறுதுணையாக இருப்பார்கள் . எனவே இங்குள்ள மாணவர்கள் அனைவரும் இந்தியா  மட்டுமல்ல வல்லரசு நாடுகள் எல்லாம் திரும்பி பார்க்கும் அளவில் செயல்பட வேண்டும்என்றார்.மேலும் இந்தக்  கண்காட்சியை
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையும் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் அனைத்து பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில் அறிவியல் மற்றும் கணித   கண்காட்சியினை நடத்தி வருகிறது என்றார்..    கண்காட்சியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலுப்பூர்,அறந்தாங்கி,புதுக்கோட்டை  கல்வி மாவட்டங்களில் இருந்து சிறந்த படைப்புகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட  ஒரு மாணவர் பங்குபெறும் படைப்பு 60, இருமாணவர் பங்குபெறும் படைப்பு 65,ஆசிரியர்கள் பங்குபெறும் படைப்பு 9 என மொத்தம் 134 படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர்.

கண்காட்சியில் வாழ்க்கையில் சவால்களுக்கான அறிவியல் தீர்வுகள் என்ற தலைப்பின் கீழ் விவசாயம் மற்றும் கரிம மேலாண்மை,சுகாதாரம் மற்றும் தூய்மை,வளமேலாண்மை,கழிவு மேலாண்மை,போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு ,கணித மாதிரிகள் ஆகிய பிரிவுகளில் மாணவர்கள் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தி வைத்திருந்தனர்.

1 மாணவர் மட்டும் பங்கு பெறும் படைப்பில் மஞ்சப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்வபள்ளி,விராலிமலைவிவேகாமெட்ரிக்மேல்நிலைப்பள்ளி,ஆலங்குடிஅரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,கம்மங்காடுஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நமணசமுத்திரம்மு.சித.மு.உயர்நிலைப்பள்ளி, மேலப்பட்டிஊ.ஒ.ந.நி.பள்ளி,புதுக்கோட்டை கற்பக விநாயகா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி,மௌண்ட் சியோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆகிய 8 பள்ளிகளின் மாணவர் செய்த படைப்புகளும், இரு மாணவர்கள் பங்கு பெறும் படைப்புகளில் மிரட்டுநிலைஅரசு உயர்நிலைப்பள்ளி,கல்குடிஅரசு உயர்நிலைப்பள்ளி,ஒத்தைப்புளிக்குடியிருப்பு அரசு உயர் நிலைப்பள்ளி,தெற்கு தொண்டைமான் ஊரணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,பரமந்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளி,பொன்னமராவதிஅமலா அன்னை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தைலாநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,நாயக்கர்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளி  ஆகிய 8 பள்ளிகளின் மாணவர்கள் செய்த படைப்புகளும் தேர்வு செய்யப்பட்டன.

ஆசிரியர்கள் பங்கு பெறும் படைப்புளில் அரசுமேல்நிலைப்பள்ளி சடையம்பட்டி பள்ளி ஆசிரியர் ஊ.கோபலகிருஷ்ணன்,புதுக்கோட்டை பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஜம்புகேஸ்வரன், புதுக்கோட்டைஇராணியார் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் மாரிமுத்து ஆகிய மூவரின்  படைப்புகளும் சிறந்த படைப்புகளாக தேர்ந்தெடுக்கப்பட்டன.

 தேர்ந்தெடுக்கப்பட்ட 19 படைப்புகளில் இருந்து சிறந்த படைப்புகள்  மதுரையில்   மாநில அளவில் நடைபெறும்  அறிவியல் கண்காட்சியில் இடம்பெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
      கண்காட்சியில் இலுப்பூர் கல்வி மாவட்ட அலுவலர் க.குணசேகரன், புதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலர் கே.அண்ணாமலை ரஞ்சன்,அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலர்(பொ) கு.திராவிடச் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..

 நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை  புதுக்கோட்டை வருவாய்   மாவட்டத்தைச் சேர்ந்த மேல்நிலை,உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ,பள்ளித்துணை ஆய்வாளர்கள் வட்டார கல்வி அலுவலர்கள், முதுகலைபட்டதாரி ஆசிரியர்கள்,பட்டதாரி ஆசிரியர்கள்,உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோரைக்கொண்ட குழுவினர் செய்திருந்தனர். முடிவில் தூயமரியன்னை மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் சோமசுந்தரம் நன்றி கூறினார்.



No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One