புதுக்கோட்டையில் மாணவர்கள் சேர்க்கையினை அதிகப்படுத்திய இரண்டு பள்ளிகளின் தலைமையாசிரிகளை ஆய்வு அலுவலரான அரசுத்தேர்வு இணை இயக்குநர்(பணியாளர்) செ.அமுதவல்லி பாராட்டினார்.
புதுக்கோட்டை,சிவகங்கை ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு கல்வித்துறைக்கு ஆய்வு அலுவலராக அரசால் நியமிக்கப்பட்ட அரசுத்தேர்வுத்துறை இணை இயக்குநர்(பணியாளர்) செ.அமுதவல்லி புதுக்கோட்டைக்கு வருகை தந்தார்.முதலில் இராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு அரசால் வழங்கப்படும் நலத்திட்டங்களை ஆய்வு செய்தார்.பின்பு அங்கு இரண்டாம் பருவத்திற்குரிய பாடப்புத்தகங்களை மாணவிகளுக்கு வழங்கினார்.அதனைத்தொடர்ந்து புதுக்கோட்டை அரசு நகராட்சி நடுநிலைப்பள்ளி,புதுக்கோட்டை அரசு உயர் தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளில் அரசால் மாணவ,மாணவிகளுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்களை ஆய்வு நடத்தி இரண்டாம் பருவத்திற்குரிய பாடப்புத்தகங்களை மாணவ,மாணவிகளுக்கு வழங்கினார். மேலும் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கையினை அதிகப்படுத்தியதற்காக இரண்டு தலைமையாசிரியர்களையும் பாராட்டினார். பின்னர் புதுக்கோட்டை வட்டார வளமையத்தில் உள்ள மாற்றுத்திறன் மாணவர்களுக்கான பயிற்சி மையத்தினை பார்வையிட்டு மாணவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியினை ஆய்வு செய்தார்.அதனைத்தொடர்ந்து முதன்மைக்கல்வி அலுவலகத்தில் மாணவர்களுக்கு அரசால் வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்து வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு ஆய்வுக்கூட்டத்தினை நடத்தினார்.அக்கூட்டத்தில் இரண்டாம் பருவத்திற்குரிய பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்கள் மாணவர்களுக்கு வழங்கியமை குறித்து ஆய்வு நடத்தினார்.
ஆய்வின்போது மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா. வனஜா,மாவட்டக்கல்வி அலுவலர்கள் புதுக்கோட்டை கே.அண்ணாமலைரஞ்சன்,அறந்தாங்கி(பொ) கு.திராவிடச்செல்வம்,இலுப்பூர் க.குணசேகரன், முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (மேல்நிலை) ஆர்.ஜீவானந்தம்,வட்டாரக்கல்வி அலுவலர்கள்,பள்ளித்துணை ஆய்வாளர்கள் கலந்துகொண்டர்
No comments:
Post a Comment