அரசுப்பள்ளியில் அசத்தல்
புதுக்கோட்டை,அக்.17:
புதுக்கோட்டை மாவட்டம்
அறந்தாங்கி ஒன்றியம்
மேற்பனைக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மழலையர் வகுப்பு தொடக்கவிழா நடைபெற்றது.
விழாவில் அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலர் கு.திராவிடச்செல்வம் தலைமையேற்று மழலையர் வகுப்புகளைத் தொடங்கிவைத்து பேசியதாவது: இன்று பலதுறைகளிலும் சாதனையாளர்களாகத் திகழும் அனைவரும் அரசுப்பள்ளிகளில் பயின்றவர்களே. நடிகர் ஜீ.வி.பிரகாஷ் தொடங்கிய *Adopted school challenge* திட்டத்தின் கீழ் இப்பள்ளியின் மழலையர் வகுப்பிற்கான செலவினத் தொகையை நன்கொடையாக தர முன்வந்துள்ள துபாயில் பொறியாளராகப் பணிபுரியும் நிமல் ராகவனின் பணியும்
இப்பள்ளிக்கு நன்கொடை பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட ஆசிரியர் சிகரம் சதிஷ்குமாரின் பணியும் பாராட்டுக்குரியது என்றார்.
பின்னர் அரசுப் பள்ளியில் இது போன்ற நல்லதொரு தொடக்கத்தை கொண்டுவந்த ஆசிரியர்களையும் இளைஞர்களையும் பாராட்டினார்.
இவ்விழாவில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜன், தொழிலதிபர் சிதம்பரம், பெற்றோர்கள், இளைஞர் மன்றத்தினர் மற்றும் ஊர்ப்பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் முத்துசாமி, கோபு, மஞ்சுளா ஆகியோர் செய்திருந்தனர்.
முன்னதாக தலைமை ஆசிரியர் சுமதி வரவேற்றுப் பேசினார். விழா முடிவில் அறிவியல் ஆசிரியர் செல்வராணி நன்றி கூறினார்.
No comments:
Post a Comment