தமிழகம் முழுவதும், 2,000 அங்கன்வாடிகளில், எல்.கே.ஜி., -- யு.கே.ஜி., வகுப்புகள் துவக்கப்பட உள்ளன.தமிழகத்தில், பள்ளி கல்வி துறையில், பல்வேறு மாற்றங்களை அமைச்சர், செங்கோட்டையன் ஏற்படுத்தி வருகிறார்.
மத்திய அரசின் நிதியுதவியுடன், தமிழகத்தில், 32 மாவட்டங்களில், தலா, ஒரு மாதிரி பள்ளி அமைக்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., துவங்க, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார்.
இந்த திட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள, 2,000 அங்கன்வாடிகளில், இந்த கே.ஜி., வகுப்புகள் துவக்கப்பட உள்ளன. அங்கன்வாடிகளில், மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள், எல்.கே.ஜி., என்றும், நான்கு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள், யு.கே.ஜி., என்றும் வகைப்படுத்தப்படுவர்.அங்கன்வாடிகளில் உள்ள இந்த குழந்தைகளுக்கு, தொடக்க பள்ளி ஆசிரியர்கள் சென்று, தினமும், இரண்டு மணி நேரம், கே.ஜி., பாடத்திட்டத்தை நடத்துவர்.
இதற்காக, மாவட்டம் தோறும் உள்ள அங்கன்வாடிகளின் பட்டியலை, சமூக நலத்துறையுடன் இணைந்து, கணக்கெடுக்கும் பணியை, தொடக்கக் கல்வி துறையினர் துவக்கியுள்ளனர்.
No comments:
Post a Comment