ஊட்டியில் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட விழிப்பு உணர்வு சுற்றுலாவில், ``மாணவர்கள் தங்கள் வீட்டருகே வசிப்பவர்கள், நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்டவர்களுக்கு சுகாதாரம் குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்த வேண்டும்’ என ஆட்சியர் பேசினார்.
தமிழ்நாடு சுற்றுலாத்துறை ஒவ்வாெரு மாவட்டத்திலிருந்தும் 75 மாணவர்கள், 75 மாணவியர் என 150 பள்ளி மாணவர்களை அந்தந்த மாவட்டங்களில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு அழைத்துச் சென்று அதன் முக்கியத்துவம், வரலாறு குறித்த விழிப்பு உணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவித்துள்ளது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி, மஞ்சூர் மற்றும் தூனேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசுப்பள்ளிகளில், படிப்பில் சிறந்த ஏழை, எளிய மாணவர்களைத் தேர்வு செய்து, ஒருநாள் விழிப்பு உணர்வுச் சுற்றுலாவாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, அரசு அருங்காட்சியகம், ஆளுநர் மாளிகை, பழைமை வாய்ந்த கட்டடங்கள், அஸ்ட்ரானமி சென்டர் மற்றும் காஸ்மிக் லே லேபாரேட்டரி உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அரசு தாவரவியல் பூங்காவுக்கு அழைத்து வரப்பட்ட மாணவர்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்ப்பது, வசிக்கும் இடங்களைச் சுத்தமாக வைத்துக்காெள்வது, கழிவறைகளைப் பயன்படுத்துவது குறித்து ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் உறுதிமாெழி ஏற்றுக்காெண்டனர். மாணவர்களுடன் பேசிய ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா, ‛இங்கு வந்துள்ள மாணவர்கள் அனைவரின் வீட்டிலும் கழிப்பறை உள்ளதா என்பது உட்பட சுகாதாரம் சார்ந்த சில கேள்விகள் கேட்டார். ‘மாணவர்கள் அவர்களுக்குப் புரிந்த அளவில் கழிப்பறை மற்றும் சுகாதாரம் குறித்து தங்கள் வீட்டருகே வசிப்பவர்கள், நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்டவர்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்த வேண்டும். அப்பாேதுதான் எதிர்காலத்தில் கழிப்பறை இல்லா வீடுகளை நம்மால் ஏற்படுத்த முடியும்’’ என்றார்.
No comments:
Post a Comment