எல்.கே.ஜி., வகுப்புக்கான அட்மிஷன், டிசம்பர் மற்றும் ஜனவரியில் துவங்கும் என, தனியார் பள்ளிகள் அறிவித்துள்ளன.தமிழகத்தில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடுமையாக சரிந்து வரும் நிலையில், தனியார் மெட்ரிக் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் போன்றவற்றில், மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. பல பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாகும் நிலையில், கூடுதல் வகுப்பறைகள் கட்ட இடமின்றி திணறுகின்றனர்.நடப்பு கல்வியாண்டில், அரசு தொடக்கப் பள்ளிகளில், விஜயதசமிக்கு சிறப்பு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. வரும், 31ம் தேதி வரை மாணவர்களை சேர்க்க, பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு தலைகீழ் மாற்றமாக, தனியார் பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டில், ப்ரீ கே.ஜி., மற்றும் எல்.கே.ஜி., வகுப்புகளுக்கு, மாணவர் சேர்க்கை பணிகள் துவங்கியுள்ளன.தற்போதே பள்ளிகளுக்கு சென்று, மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பெற, பெற்றோர் போட்டி போட்ட வண்ணம் உள்ளனர். சில பள்ளிகளுக்கு பெற்றோர் சென்று, கைப்பட கடிதம் எழுதி கொடுத்து, இடங்களை, 'புக்கிங்' செய்யும் முயற்சி களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், பல பள்ளிகள், 'தற்போது மாணவர் சேர்க்கை இல்லை' என, அறிவிப்பு செய்துள்ளன. சில பள்ளிகள், 'டிசம்பரில் விண்ணப்பம் வழங்கப்படும்' என்றும், சில பள்ளிகள், 'ஜனவரியில் விண்ணப்பம் வழங்கப்படும்' என்றும், அறிவித்துள்ளன.இதற்கிடையில், சென்னையின் புறநகரில் செயல்படும், தனியார் குழும கல்வி நிறுவனங்கள், ஜன., 12ல் மாணவர் சேர்க்கை பணிகள் துவங்கும் என, அறிவித்துள்ளன.
No comments:
Post a Comment