தொலைக்காட்சியில்தான் விளம்பர இடைவேளை என்றால் தற்போது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமைத் தொடர்ந்து வாட்ஸ் அப் தளத்திலும் விளம்பரங்கள் வரவிருக்கின்றன.
மக்களை இணைய வழியில் எளிதாக இணைக்க வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் மட்டுமே வாட்ஸ் அப் உருவாக்கப்பட்டது. வாட்ஸ் அப் நிறுவனத்தை ஃபேஸ்புக் வாங்கிய பின்னர் தொழில்நுட்ப புதுமைகள் பல புகுத்தப்பட்டன. வாட்ஸ் வாய்ஸ் கால், அப் வீடியோ கால் என பல வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டன.
வாட்ஸ் அப் உலகம் முழுவதும் பரவிவிட்டது. ஆனால், ப்ளே ஸ்டோர் டவுன்லோட் மற்றும் பங்கு வர்த்தம் மட்டுமே வாட்ஸ் அப்கான வருமான வழியாக இருக்கிறது.
வாட்ஸ் அப் பயன்படுத்த கட்டணம் என்ற யோசனை இன்னும் அமல்படுத்தப்படவில்லை.
இது பரவலாக எதிர்ப்பையே பெறும் என்பதால் வேறு வருமான வழிகளை யோசித்த நிறுவனம் தற்போது விளம்பரங்களை குறி வைத்திருக்கிறது.
இன்ஸ்டாகிராமில் வரும் விளம்பரங்கள் போல வாட்ஸ் அப்பிலும் விளம்பரங்களைப் பதிவிட அந்நிறுவனம் ஆயத்தமாகி வருகிறது. 2019-ல் இருந்து இது நடைமுறைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன
No comments:
Post a Comment