கோ. இராமநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற மண்டல போட்டிகளில் பங்கேற்று இரண்டு தங்கம், இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் என நான்கு பரிசுகளை வென்று சாதனை படைத்தனர். மாணவி அனிதா 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றார். மாணவி பிரமிளா பத்து கிலோமீட்டர் ரோடு சைக்கிளிங் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். மாணவிகள் சவுந்தர்யா, கனிமொழி ஆகியோர் பத்து கிலோமீட்டர் ரோடு சைக்கிளிங் போட்டியில் தங்கம் வென்றார்கள். இவர்கள் அடுத்த மாதம் கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் மாநிலப் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
இம்மாணவிகளை பள்ளியின் தலைமையாசிரியர் ராஜசேகரன், உதவித் தலைமை ஆசிரியர்கள் நாராயணசாமி, அய்யாக்கண்ணு மற்றும் கணேசன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் தீனதயாளன் மற்றும் விளையாட்டு ஆசிரியர்கள் முனியப்பன், செந்தில் வடிவு, சத்திய ஜோதி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டினர்.
No comments:
Post a Comment