எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

விரைவில் ஆசிரியர்களுக்கும் பயோமெட்ரிக் - பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

Saturday, October 27, 2018


விரைவில் ஆசிரியர்களுக்கும் பயோமெட்ரிக் முறையை கொண்டு வரவுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாய பயிர்கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு காசோலைகளை வழங்கினார்.

இதனையடுத்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், ஆசிரியர்களுக்கும் பயோமெட்ரிக் முறையை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜனவரி மாத இறுதிக்குள் டேப் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One