எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

சிறப்பாசிரியர் இடமாறுதல் விண்ணப்பங்கள் வழங்கல்

Friday, October 12, 2018





தர்மபுரி: நீலகிரி, கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு பகுதிகளில் பணியாற்றும், சிறப்பாசிரியர்கள் இடமாறுதல் பெற, தர்மபுரி மாவட்ட கல்வி அலுவலகம் மூலம், 150 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

கட்டாய கல்வி சட்டத்தின்படி, எஸ்.எஸ்.ஏ ., திட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை, 100க்குமேல் உள்ள பள்ளிகளில், ஓவியம், தையல், இசை, உடற்கல்வி என, சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். மாதம், 7,500 ரூபாய் சம்பளத்தில் பணியாற்றும், இவர்களுக்கு, கடந்த, ஏழு ஆண்டுகளாக இடமாறுதல் அளிக்கப்படவில்லை. 100 மாணவர்களுக்கு குறைவான பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை, பிற பள்ளிகளுக்கு மாற்றும் வகையில் இடமாறுதல் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. இதையடுத்து, அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களில் கடந்த, ஒன்பது முதல், இன்று வரை, இடமாறுதல் பெற சிறப்பாசிரியர்கள் விண்ணப்பிக்கலாம், என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, தர்மபுரி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில், பிற மாவட்டங்களில் பணியாற்றும் சிறப்பாசிரியர்கள், தங்கள் சொந்த மாவட்டத்திற்கு வரும் வகையில் விண்ணப்பங்களை வழங்கினர். 'இம்மாவட்டத்தில் காலியாக உள்ள, 56 இடங்களுக்கு நேற்று வரை, 150பேர் விண்ணப்பித்துள்ளனர். விரைவில் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும்' என, கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One